அமெரிக்க நடிகர் பிலிப் சீமோர் ஹாப்மேன் மரணம்

செவ்வாய், பெப்பிரவரி 4, 2014

ஹாலிவுட் நடிகர் பிலிப் சீமோர் ஹாப்மேன் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடக்கக் கண்டுபிடிக்கப்பட்டார்.


பிலிப் சீமோர் ஹாப்மேன்

ஐக்கிய அமெரிக்காவின், நியூயார்க் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஹாப்மேன் இறந்து கிடப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து காவல்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


ஹெராயின் போதைப் பொருள் அதிகமாக உட்கொண்டதால் உயிரிழந்திருக்கக்கூடும்' எனக் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இவரது உடல் அருகில் மருந்து செலுத்தும் ஊசி ஒன்று கிடக்கக் கண்டுபிடிக்கப்பட்டது. இறக்கும் போது அவருக்கு வயது 46.


இதற்கிடையில், இறந்த ஹாப்மேனின் வீட்டில் இருந்து 70 பைகளில் எரோயின் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக நியூயார்க் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.


2005ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது இவருக்கு வழங்கப்பட்டது. இறுதியாக எ மோஸ்ட் வோன்டேட் மேன் என்னும் படத்தில் நடித்திருந்தார்.


மூலம் தொகு