அமெரிக்கத் தூதர் ரிச்சர்ட் ஆல்புறூக் மரணம்
புதன், திசம்பர் 15, 2010
- 25 பெப்பிரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 21 மார்ச்சு 2017: பில்லியனர் தேவீது ராக்பெல்லர் தன் 101 வயதில் மறைந்தார்
- 22 நவம்பர் 2015: போர்க்குற்றங்களுக்காக இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் வங்காளதேசத்தில் தூக்கிலிடப்பட்டனர்
- 6 நவம்பர் 2015: அப்துல்கலாம் இயற்கை எய்தினார்
- 9 ஏப்பிரல் 2015: பசுமை புரட்சியின் தந்தை நார்மன் போர்லாக் காலமானார்
ஐக்கிய அமெரிக்க இராசதந்திரி ரிச்சர்ட் ஆல்புறூக் திங்கட்கிழமை அன்று தனது 69 வது அகவையில் காலமானார். பொசுனியப் போர் (1992-1995) முடிவுக்கு வர உந்து சக்தியாக இருந்தவர் இவர் எனக் கூறப்படுகிறது. போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானித்தானில் உறுதிநிலைக்கும் இவர் பாடுபட்டவராவார்.
தற்போதைய பராக் ஒபாமா அரசில் ஆப்கானித்தான், பாக்கித்தான் நாடுகளுக்கான சிறப்புத் தூதராக இவர் பணியாற்றினார்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று அரசுத்துறைச் செயலர் இலரி கிணிண்டனுடனான சந்திப்பு ஒன்றை அடுத்து இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் உடனடியாக வாசிங்டன் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு 21 மணி நேர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஞாயிறன்று மேலும் ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி திங்களன்று அவர் இறந்தார்.
பராக் ஒபாமா உட்படப் பல உலகத் தலைவர்கள் தமது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
மூலம்
தொகு- World pays tribute to US diplomat Richard Holbrooke, பிபிசி, டிசம்பர் 14, 2010