2015 இந்திய ஒன்றியத்தின் வரவு செலவுத் திட்டம் அறிமுகம்
ஞாயிறு, மார்ச்சு 1, 2015
இந்தியாவில் இருந்து ஏனைய செய்திகள்
- 11 பெப்பிரவரி 2024: அயோத்தி இராமர் கோயில் திறப்பு விழா
- 12 செப்டெம்பர் 2020: தமிழகத்தில் செப்.30 வரை தளர்வுகளுடன் இ-பாஸ் இல்லாத பொது முடக்கம் நீட்டிப்பு
- 25 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று
- 25 பெப்பிரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 16 பெப்பிரவரி 2018: 11000 கோடி பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் நீரவ் மோதி தலைமறைவு
இந்தியாவின் அமைவிடம்
நிதியமைச்சர் அருண் ஜெட்லி 2015- 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பிப்ரவரி 28, 2015 அன்று தாக்கல் செய்தார்
இத்திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சில குறிப்பிடத்தக்கவை
- 2015-16ஆம் ஆண்டுக்கான பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.9 % ஆக இருக்கும்.
- வளர்ச்சியானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8-8.5% இருக்கும்.
- மார்ச்சு வரையான பணவீக்கம் 5% இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- வருமான பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.8& இருக்கும்.
- வரியில்லாத வருமானம் ரூ2.21 டிரிலியன் ஆக இருக்கும்.
- நிறுவனங்களில் உள்ள அரசின் பங்குகளை குறைப்பதன் மூலம் 2015-16ஆம் ஆண்டில் அரசுக்கு ரூ 410 பில்லியன் வருமானம் வரும்.
- 2016-17ஆம் ஆண்டில் அரசு நிறுவன பங்குகளை குறைத்து ரூ 55,000 கோடி வருமானம் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- பொதுத்துறை வங்கிகளின் நிருவாகத்தை மேம்படுத்த தன்னிட்ச்சையான அதிகாரம் கொண்ட வங்கி ஆணையம் அமைக்கப்படும்.
- தற்போது 43 நாடுகளுக்கு மட்டும் உள்ள வந்ததும் பெறும் நுழைவாணை 150 நாடுகளுக்கு உயர்த்தப்படும்.
- ரூ 349.99 பில்லியன் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ஒதுக்கப்படும்.
- சந்தையின் மொத்த கடன் வாங்கும் திறன் ரூ 6 திரிலியன் என கணிக்கப்பட்டுள்ளது.
- சந்தையின் நிகர கடன் வாங்கும் திறன் ரூ 4.56 திரிலியன் என கணிக்கப்பட்டுள்ளது.
- செல்வ வரி நீக்கப்படுகிறது.
- அதற்கு பதிலாக 2% மேல்வரி பெரும்பணக்காரர்களுக்கு விதிக்கப்படும்.
- நிறுவனங்களுக்கான வரி 30% என்பதிலிருந்து 25%மாக அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் குறைக்கப்படும்.
- புதிய வரிகள் மூலம் நிகர தொகை ரூ 150.68 பில்லியன் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
- 22 பொருட்களுக்கு ஆயத்தீர்வு வரி குறைக்கப்படும்.
- காப்பீடு வரம்பை தாண்டிய 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவ செலவுகளுக்கு ரூ 30.000 கழிவு உண்டு.
- மாற்றுத்திறனாளிகள் ரூ 25.000 வரை கழிவு பெறலாம்
- இரும்புக்கும் எ கிற்கும் மான இறக்குமதி வரி 10%லிருந் 15% ஆக உயர்த்தப்படுகிறது
- தேசிய உள்கட்டமைப்பு நிதி அமைக்கப்படும்
- சாலை, தொடருந்து, பாசனம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளுக்காக வரி இல்லா கடன்பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படும்
- 4,000 மெகா வாட் திறனுடைய 5 மின்திட்டங்கள் முன்மொழியப்படும்
- கூடங்குளத்தில் இரண்டாவது அலகு அணு மின் உலை செயல்படுத்தப்படும்
- திட்டமிட்ட செலவுகள் ரூ 4.65 திரிலியன் என எதிர்பார்க்கப்படுகிறது.
- திட்டமிடாச் செலவுகள் ரூ 13.12 திரிலியன் என கணிக்கப்பட்டுள்ளது.
- பாதுகாப்பு படைகளுக்கு ரூ 2.46 திரிலியன் ஒதுக்கப்படும்
- நலத்துறைக்கு ரூ 331.5 பில்லியன் ஒதுக்கப்படும்
- அரசுத்துறை வங்கிகளுக்கு ரூ 79.4 பில்லியன் முதலீடு செய்யப்படும்
- தங்கத்திற்கான இறக்குமதி வரி 10 % ஆக இருக்கும் இதில் மாற்றமில்லை
- இந்தியா தங்க நாணயங்களை வெளியிடும் இது தங்க இறக்குமதியை குறைக்கும்
- உணவுக்கான மானியம் ரூ 1.24 திரில்லியனாக கணிக்கப்பட்டுள்ளது
- உர மானியம் ரூ 729.69 பில்லியனாக கணிக்கப்பட்டுள்ளது.
- எரிபொருள் மானியம் ரூ 300 பில்லியனாக கணிக்கப்பட்டுள்ளது.
மூலம்
தொகு- Tax deduction limit up Rs 50K for investment in pension fund ரீடிப் பிப்பரவரி 28, 2015
- India to cut corporate tax to 25% over four years ரீடிப் பிப்பரவரி 28, 2015
- Govt announces host of steps to deal with black money menace ரீடிப் பிப்பரவரி 28, 2015
- Highlights of the Union Budget ரீடிப் பிப்பரவரி 28, 2015
- Budget: What's costlier, what's cheaper? ரீடிப் பிப்பரவரி 28, 2015