ஸ்பெயின் நிலநடுக்கத்தில் ஒன்பது பேர் உயிரிழப்பு
வெள்ளி, மே 13, 2011
- 14 சூன் 2014: 2014 உலகக்கிண்ணக் கால்பந்து: நெதர்லாந்திடம் நடப்பு உலக வாகையர் எசுப்பானியா தோல்வி
- 26 சனவரி 2014: ஆஸ்திரேலிய ஓப்பன் 2014: சுவிஸ் நாட்டின் வாவ்ரிங்கா வெற்றி
- 5 ஆகத்து 2013: சிப்ரால்ட்டர் தொடர்பில் எசுப்பானியாவிற்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையில் முறுகல்
- 25 சூலை 2013: எசுப்பானியாவில் தொடருந்து தடம் புரண்டதில் குறைந்தது 78 பேர் உயிரிழப்பு
- 7 சூலை 2012: சதுரங்கத்தில் 25 ஆண்டுகளுக்கு பின் கார்ப்போவை வென்றார் காசுப்பரோவ்
ஸ்பெயினின் லோர்க்கா நகரில் அடுத்தடுத்து இடம்பெற்ற இரண்டு நிலநடுக்கத்தினால் 9 பேர் கொல்லப்பட்டனர். புதன்கிழமை 4.4 அளவு நிலநடுக்கம் தாக்கியது. இரண்டு மணி நேரத்தின் பின்னர் மீண்டும் அதே நகரை 5.1 அளவு நிலநடுக்கம் தாக்கியிருந்தது.
நகரின் ஆயிரக்கணக்கான வரலாற்றுத் தொன்மை மிக்க கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்.
93,000 பேர் வசிக்கும் லோர்க்கா நகரின் அனேகமாக அனைத்துக் கட்டடங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.
காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் அப்பகுதிக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிலநடுக்கத்தின் அளவு குறைவாக இருந்தாலும் மேற்பரப்புக்குக் கிட்டவாக இது நிலை கொண்டிருந்ததால் இதன் தாக்கம் அதிகமாக இருந்திருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்பெயின் நாட்டில் நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இது என்று கூறப்படுகிறது. 1956 ஆம் ஆண்டில் கிரனாடாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
மூலம்
தொகு- Grieving Spain to bury Lorca earthquake victims, மே 13, 2011
- Hundreds queue for food after Spain earthquake, தி இண்டிபென்டன்ட், மே 13, 2011