வெனிசுவேலா நீதிமன்றம் சட்டமியற்றும் அதிகாரத்தை பெற்றது

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

ஞாயிறு, மார்ச்சு 31, 2024

வெனிசுவேலா நீதிமன்றம் சட்டமியற்றும் அதிகாரத்தை பெற்றது இந்த அதிகாரம் நாடாளுமன்றத்திடமே இருந்தது.


நாட்டின் அதிபர் நிக்கோலசு முர்டோ நிறைய அதிகாரங்களை தன்னிடம் குவித்ததிற்கு ஒரு மாதம் கழித்து இந்த ஆணையை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. நாடாளுமன்றத்தில் எதிர் கட்சிகள் பெரும்பான்மை பெற்றுள்ளன என்பதும் கவனிக்கத்தக்கது. எப்போது இந்த அதிகாரத்தை திரும்ப நாடாளுமன்றத்திடம் ஒப்படைக்க போகிறோம் என்று நீதிமன்றம் தெரிவிக்கவில்லை.


இதை பல்வேறு நாடுகள் அமைப்புகள் கண்டித்துள்ளன. அமெரிக்கா, மெக்சிக்கோ, பிரேசில், பெரு, சிலி போன்ற நாடுகள் இது சனநாயகத்திற்கு நல்லதல்ல என்று கூறியுள்ளன. இவ்வத்தரவை திரும்ப பெறுமாறு நீதிமன்றத்தை கேட்டுள்ளன. அந்நாட்டின் தலைமை வழக்கறிஞரும் இதை கண்டித்துள்ளார்.


வெனிசுவேலேவின் பெரிய ஆதரவு நாடான உருசியா இதை கண்டிக்கவில்லை. கச்சா எண்ணெய் விலை குறைவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாததா்ல் அதிபர் நிக்கலோசு அதிகாரங்களை தன்னிடம் குவிக்கிறார் என குற்றம் சாட்டப்படுகிறது

மூலம்

தொகு