வெண்கலக்கால மனித எச்சங்கள் ஸ்கொட்லாந்தில் கண்டுபிடிப்பு

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

வியாழன், மார்ச்சு 10, 2011

ஸ்கொட்லாந்தில் வெண்கலக் கால மனித எச்சங்கள் அடங்கிய இரண்டு சாடிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.


ஆங்கசு என்ற பிரதேசத்தில் உள்ள கிரிமுயர் என்ற நகரில் உடைந்த கற்பாறை ஒன்றின் கீழே இந்தச் சாடிகள் தொல்லியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு புதைகலங்களும் 4,000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இவ்வகையான கலங்கள் வெண்கலக் காலத்தில் இறந்தவர்களின் அஸ்தியைச் சேமிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.


இக்கலங்களில் ஒன்று 4 அங்குல விட்டமுடையதென்றும், மற்றையது 8 அங் எனவும் தொல்லியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.


"வெண்கலக்காலத்தில் இறந்தவர்கள் விறகுகளைக் கொண்ட அடுக்குகளில் வைத்து எரிக்கப்பட்டு பின்னர் அவர்களின் எலும்புத்துண்டுகள் சேகரிக்கப்பட்டுஇவ்வாறான சாடிகளில் வைத்துப் பாதுகாக்கப்பட்டன," என மசெல்பரோவைச் சேர்ந்த தொல்லியலாளர் மெலனி ஜோன்சன் தெரிவித்தார்.


கண்டெடுக்கப்பட்ட கலங்களில் பெருமளவு எலும்புத் துண்டுகள் காணப்பட்டதாகவும், இவற்றைக் கொண்டு அந்த எலும்புகளுக்குரியவரின் பால், வயது, அவர்கள் எவ்வகையான நோய்களால் பாதிக்கப்பட்டனர் போன்ற விபரங்களைக் கண்டறிய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.


மூலம்

தொகு