விக்கிலீக்ஸ் வெளியிடவிருக்கும் இராசதந்திர ஆவணங்கள் தொடர்பாக அமெரிக்கா எச்சரிக்கை

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

ஞாயிறு, நவம்பர் 28, 2010


இரகசிய ஆவணங்களை வெளியிடும் விக்கிலீக்ஸ் இணையத்தளம் புதிதாக உலக நடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களுக்கிடையே பரிமாறப்பட்ட இரகசிய ஆவணங்களை வெளியிட ஆயத்தமாகியிருக்கும் தறுவாயில், அவற்றை வெளியிட வேண்டாம் என அமெரிக்கா விக்கிலீக்சின் நிறுவனர் ஜூலியன் அசான்ச்சிடம் கேட்டுள்ளது.


அமெரிக்க வெள்ளை மாளிகை

அமெரிக்க அரசுத் திணைக்கத்துக்குச் சொந்தமான அதிகாரபூர்வ ஆவணங்களை வெளியிடுவது அமெரிக்க சட்டத்துக்கு எதிரானதாகும் எனவும் இவ்வாவணங்களில் சம்பந்தப்பட்டுள்ள பலர் உயிராபத்தைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.


முன்னர் ஆப்கானித்தான், ஈராக் தொடர்பாக வெளியிட்ட ஆவணங்களை விட இப்போது பல மடங்கு அதிகமான ஆவணங்களைத் தாம் வெளியிட விருப்பதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் அறிவித்துள்ளது.


”அரசாங்கத் திணைக்களத்தின் தொடர்புகள் மற்றும் உலகின் அனைத்துப் பகுதியிலுமுள்ள எமது தூதரகங்களுடனான, குறிப்பாக ஆத்திரேலியா, பிரித்தானியா, கனடா, இசுரவேல், உருசியா, துருக்கி தூதரங்களுடனான தொடர்புகள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படலாமென எதிர்பார்க்கப்படுவதால் நாம் அதற்கு தயாராகி வருகிறோம்,” என அமெரிக்க அரசாங்கத் திணைக்களப் பேச்சாளர் பிலிப் இறவ்லி தெரிவித்தார்.


விக்கிலீக்ஸ் அனைத்து ஆவணங்களையும் தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்க அரசுத் திணைகக்ள வழக்கறிஞர் ஹரல்ட் கோ அசான்ச்சிடம் கேட்டுள்ளார்.


மூலம்

தொகு