வட மாகாணசபைத் தேர்தல், 2013: தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெரும் வெற்றி

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

ஞாயிறு, செப்டெம்பர் 22, 2013

நேற்று நடந்து முடிந்த இலங்கையின் வட மாகாண சபைக்கான தேர்தலில் மொத்தமுள்ள 38 இடங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 30 இடங்களைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 7 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஒரு இடத்தைக் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் முதலாவது வடமாகாண சபைக்கான ஆட்சியை அமைக்கும் வாய்ப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றுள்ளது.


வடமாகாண சபைத் தேர்தலில் வெல்லப்பட்ட ஆசனங்கள் 2013.

வட மாகாணத்தின் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றது. மன்னார் மாவட்டத்தில் 3 இடங்களையும், கிளிநொச்சியில் 3 இடங்களையும், முல்லைத்தீவில் 4 இடங்களையும், வவுனியாவில் 4 இடங்களையும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 14 இடங்களையும் அந்தக் கட்சி பெற்றுள்ளது. அத்துடன் மாகாணத்தில் அதிக இடங்களைக் கைப்பற்றியதால் 2 கூடுதல் இடங்களும் அவர்களுக்குக் கிடைக்கவுள்ளன.


யாழ்ப்பாண மாவட்டத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் கூட்டமைப்பு சராசரியாக 84% வாக்குகளைப் பெற்றுள்ளது. இத்தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி, ஈழ மக்கள் சனநாயகக் கட்சியுடன் (ஈபிடிபி) இணைந்து போட்டியிட்டிருந்தாலும், அவர்களுக்கு 7 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. அத்துடன் ஈபிடிபி இன் கோட்டை எனக் கருதப்பட்டு வந்த ஊர்காவற்துறைத் தொகுதியில் கூட்டமைப்பு 64% வாக்குகளைப் பெற்றது.


"வட மாகாண மக்கள் தம்மிடம் பெரும் பொறுப்பை கையளித்துள்ளனர். இந்த அமோக வெற்றி தமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது," என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரான சி. வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். "அரசாங்கம் இனி தான்தோன்றித்தனமாக செயற்படமுடியாது. இதுவரை காலமும் ஒரு அமைப்பு இல்லாமையினாலேயே அவ்வாறு அரசாங்கத்தினால் செயற்பட முடிந்தது. இனி அவ்வாறு செயற்பட முடியாது. சட்ட திட்டங்களுக்கு அமைவாகவே நடக்க வேண்டும். சிவில் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரே ஆளுநராக எம்மோடு இணைந்து செயற்பட வேண்டுமென நாம் விரும்புகின்றோம்," என்றார்.


"மக்கள் சமாதானத்துக்காக வாக்களித்துள்ளார்கள். அவர்கள் தமது எண்ணங்களை வாக்குகளில் பிரதிபலித்துள்ளார்கள். அவர்களது தீர்ப்புக்கு ஏற்ப தாம் நடப்போம்," என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.


யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம்
ஊர்காவற்துறை தேர்தல் தொகுதி:
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 8917
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 4164
சோசலிச சமத்துவக் கட்சி - 29
ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு - 21
ஐக்கிய தேசியக் கட்சி - 17
வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி:
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 23,442
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 3,763
ஐக்கிய தேசியக் கட்சி - 173
காங்கேசன்துறை தேர்தல் தொகுதி:
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 19,596
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 4,
சுயேட்சைக் குழு 7 - 62
சுயேட்சைக் குழு 6 - 42
ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு - 41
ஐக்கிய தேசியக் கட்சி - 35
மானிப்பாய் தேர்தல் தொகுதி
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 28,210
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 3,898
சுயேட்சைக் குழு 6 - 109
ஐக்கிய தேசியக் கட்சி - 88
கோப்பாய் தேர்தல் தொகுதி
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 26,467
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 4386
ஐக்கிய தேசியக்கட்சி - 127
உடுப்பிட்டி தேர்தல் தொகுதி:
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 18,855
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2,424
ஐக்கிய தேசியக் கட்சி - 57
பருத்தித்துறை தேர்தல் தொகுதி:
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 17,719
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2,953
ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு - 162
சுயேட்சைக் குழு 1 - 80
ஐக்கிய தேசியக் கட்சி - 26
சாவகச்சேரி தேர்தல் தொகுதி:
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 22,922
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 4,193
ஐக்கிய தேசியக் கட்சி - 89
நல்லூர் தேர்தல் தொகுதி:
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 23733
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2651
ஐக்கிய தேசியக்கட்சி - 148
யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி:
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 16421
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2416
ஐக்கிய தேசியக்கட்சி - 60
கிளிநொச்சி மாவட்டம்
கிளிநொச்சி
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 36323
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7737
ஈழவர் ஜனநாயக முன்னணி - 300
முல்லைத்தீவு மாவட்டம்
முல்லைத்தீவு தேர்தல் தொகுதி:
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 27,620
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7,063
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 199
ஐக்கிய தேசியக் கட்சி - 195
வவுனியா மாவட்டம்
வவுனியா தேர்தல் தொகுதி:
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 40,324
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 16,310
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1,967
ஐக்கிய தேசியக்கட்சி - 1,704
மன்னார் மாவட்டம்
மன்னார் தேர்தல் தொகுதி:
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 31,818
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 14,696
இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் - 4,436
ஐக்கிய தேசியக்கட்சி - 180


மூலம்

தொகு