யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவருக்கு சிறப்புக் காவல்துறை விருது

ஞாயிறு, சனவரி 9, 2011

இலங்கை காவல்துறை வரலாற்றில் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ் பேசும் 336 பேர் ஒரே தடவையில் காவல்துறைப் பயிற்சிகளை முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வெளியேறினர். இவர்களில் சகல துறைகளிலும் திறமைகளை வெளிப்படுத்திய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குணரத்தினம் குணரோஜன் (வயது 25) முதலாம் இடத்தைப் பெற்று பல்வேறு சிறப்பு பரிசில்களை பெற்றுக்கொண்டார்.


உள்நாட்டுப் போர் இடம்பெற்ற கடந்த 30 ஆண்டுகளில் வடக்கு, கிழக்குப் பகுதியைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் எவரும் காவல்துறைச் சேவைக்கு உள்வாங்கப்படவில்லை. இதனால் தமிழ் பேசும் காவல்துறையினர் வட, கிழக்கில் பற்றாக்குறையாக இருந்தனர்.


காவல்துறைப் பயிற்சியை முடித்து வெளியேறியவர்களில் நான்கு கொன்ஸ்டபிள்களும், ஒரு பெண் கொன்ஸ்டபிளும் சிறப்பு நினைவுச் சின்னங்களைப் பெற்றுக்கொண்டனர். .


களுத்துறையில் உள்ள இலங்கைக் காவல்துறைப் பயிற்சிப் பாடசாலையில் 6 மாத பயிற்சியைப் பூர்த்தி செய்தவர்களுக்கு சிறப்பு மரியாதை அணிவகுப்பின் போது காவல்துறைமா அதிபர் மகிந்த பாலசூரிய நியமனங்களை வழங்கினார்.


மூலம்