மூதூர் குண்டுவெடிப்பில் ஒரு சிறுவன் உயிரிழப்பு, 4 சிறுவர்கள் காயம்
ஞாயிறு, அக்டோபர் 24, 2010
இலங்கையில் இருந்து ஏனைய செய்திகள்
- 9 சூலை 2016: கிழக்கிலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008
- 4 சூன் 2016: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது
- 9 ஏப்பிரல் 2015: திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது
- 9 ஏப்பிரல் 2015: துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு
- 9 ஏப்பிரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்
இலங்கையின் அமைவிடம்
இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் மூதூரில் சிறுவர்கள் கடற்கரையில் கண்டெடுத்த பொருள் ஒன்றை விளையாடிக்கொண்டிருக்கும் போது அப்பொருள் வெடித்ததில் ஐவர் படுகாயமடைந்தனர். இவர்களில் ஒரு சிறுவன் மருத்துவமனையில் உயிரிழந்தான்.
இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை மூதூரில் தக்வா நகர் என்ற இடத்தில் இடம்பெற்றதாக காவல்துறைப் பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி டெய்லிமிரர் பத்திரிகைக்குத் தெரிவித்தார்.
காயமடைந்த சிறுவர்கள் மூன்றிற்கும் ஒன்பது வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் மூதூர் மருத்துவமனைக்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
மூதூர் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்
தொகு- Blast in Mutur டெய்லிமிரர், அக்டோபர் 23, 2010
- Child killed in blast, டெய்லிமிரர், அக்டோபர் 23, 2010