முனைவர் பட்ட ஆய்வில் 100 வயது இந்தியர்

புதன், அக்டோபர் 20, 2010

100 வயதை அடைந்த இந்தியர் ஒருவர் முனைவர் பட்டம் பெறுவதற்காகப் பல்கலைக்கழகம் செல்கிறார். படிப்பதற்கு வயது எல்லை கிடையாது என அவர் கூறுகிறார்.


அசாம் மாநிலத்தைச் சேர்ந்த போலோராம் தாசு என்பவர் தனது 100வது பிறந்தநாளை குவகாத்தி பல்கலைக்கழகத்தில் சேர்ந்ததன் மூலம் சென்ற வாரம் கொண்டாடினார்.


"எனது மகன் 55 வயதில் முனைவர் பட்டம் பெற்றார், என்னால் ஏன் முடியாது?" என திரு தாஸ் வினவினார்.


1930 ஆம் ஆண்டில் தனது 19 வது அகவையில் இவர் பிரித்தானிய ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடி சிறை சென்றவர். பின்னர் ஆசிரியராக, வழக்கறிஞராகப் பணியாற்றி அசாம் மாநில நீதிபதியாக 1971 ஆம் ஆண்டில் இளைப்பாறினார்.


முனைவர் பட்டத்திற்காக நியோ-வைஷ்ணவம் குறித்து ஆய்வுகளை மேற்கொள்லத் திட்டமிட்டுள்ளார். அசாமில் சமூக ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க இத்தத்துவம் பயன்பட்டுள்ளது என இவர் நம்புகிறார்.


மூலம் தொகு