மாலியில் துவாரெக் போராளிகள் போர் நிறுத்தத்தை முடித்துக் கொண்டனர்
ஞாயிறு, திசம்பர் 1, 2013
- 14 திசம்பர் 2013: மாலியில் துவாரெக் போராளிகளின் தாக்குதலில் இரண்டு அமைதிப்படையினர் கொல்லப்பட்டனர்
- 2 திசம்பர் 2013: மாலியில் துவாரெக் போராளிகள் போர் நிறுத்தத்தை முடித்துக் கொண்டனர்
- 3 நவம்பர் 2013: மாலியில் இரண்டு பிரெஞ்சு செய்தியாளர்கள் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர்
- 27 செப்டெம்பர் 2013: மாலியின் துவாரெக் போராளிகள் அமைதிப் பேச்சுக்களில் இருந்து விலகுவதாக அறிவிப்பு
- 19 சூன் 2013: துவாரெக் போராளிக் குழுவுடன் மாலி அரசு அமைதி உடன்பாடு
கடந்த சூன் மாதத்தில் மாலி நாட்டு அரசுடன் தாம் ஏற்படுத்திய போர் நிறுத்த உடன்பாட்டை முடித்துக் கொண்டுள்ளதாக துவாரெக் இனப் போராளிகள் அறிவித்துள்ளனர்.
மாலியின் வடக்கே கிடால் நகருக்குப் பயணம் மேற்கொண்ட பிரதமர் ஓமார் தத்தாம் லீயிற்கு எதிர்ப்புத் தெரிவித்த துவாரெக் இனத்தவருக்கும் மாலிப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களை அடுத்தே இவ்வறிவிப்பை போராளிகள் விடுத்துள்ளனர். இம்மோதலில் பலர் காயமடைந்தனர்.
மேற்படி மோதல் இது போருக்கான அறைகூவல் என அசவாத் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கூறியுள்ளார்.
18 மாதங்கள் இடம்பெற்ற மோதல்களை அடுத்து பிரெஞ்சுப் படையினர் நாட்டில் ஊடுருவி அமைதியை நிலைநாட்டினர். இதனை அடுத்து சூன் மாதத்தில் போர்நிறுத்தம் ஏற்பட்டது.
துவாரெக் போராளிகள் மாலியின் வடக்குப் பகுதியில் அசவாத் என்ற பெயரில் தனிநாடு கோரிப் போராடி வருகின்றனர்.
மூலம்
தொகு- Tuareg separatist group in Mali 'ends ceasefire', பிபிசி, நவம்பர் 29, 2013
- Malian separatist rebels end ceasefire after clashes, அங்கோலா பிரஸ், நவம்பர் 30, 2013