மலையாள விக்கி சங்கமோற்சவம் 2013: மலையாள விக்கிப்பீடியர்களின் ஆண்டுக் கூடல் தொடங்கியது
சனி, திசம்பர் 21, 2013
- 5 ஏப்பிரல் 2016: பனாமா பேப்பர் விவகாரம் உலகின் அதிகாரமிக்கவர்களின் வரி ஏய்ப்பை காட்டியுள்ளது
- 23 திசம்பர் 2015: அண்டத்தின் அழகி பட்டம் தவறுதலாக பிலிப்பைன்சு அழகிக்கு பதில் கொலம்பியா அழகிக்கு தரப்பட்டது
- 9 ஏப்பிரல் 2015: கோவையில் பெப்ரவரி 2010 இல் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு
- 1 ஏப்பிரல் 2015: பெரியார் பல்கலைக்கழகத்தில் நூறு மாணவர்கள் பங்கேற்ற விக்கியூடக மின் ஆவணவாக்கப் பயிலரங்கம்
- 25 மார்ச்சு 2015: சேலம் நடுவண் சிறையில் தமிழ்க்கணிமை, திறவூற்று மென்பொருள் பயிலரங்கம்
மலையாள விக்கிப்பீடியர்களின் ஆண்டிற்கொருமுறை கூடல் என்னும் மலையாள விக்கி சங்கமோற்சவம் 2013, கேரள மாநிலத்தின் ஆலப்புழாவில் இராதா கன்வென்சன் அரங்கில் இன்று தொடங்கியது. இந்நிகழ்விற்கு இந்தியாவின் பல பகுதியிலிந்து விக்கிப்பீடியா பயனர்களும் பொது மக்களும் பங்கேற்றனர். இந்த நிகழ்வு திசம்பர் 21, 22 ஆகிய நாட்களில் கருத்தரங்கமாகவும் 23 ஆம் நாளன்று நீர் உலாவாகவும் நடைபெற உள்ளது.
திசம்பர் 21, சனிக்கிழமை அன்று பங்கேற்பாளர்களின் பதிவுடன் நிகழ்வு தொடங்கியது. விக்கி மாணவர் சந்திப்பு, விக்கி மாற்றுத்திறனாளி பயனர்களுக்கான விக்கி தொகுத்தல் பயிற்சி, பொது மக்களுக்கான விக்கி தொகுத்தல் பயிற்சி, விக்கி வினா-விடை, விவாதங்கள், விக்கி வலையமைப்பு ஆகியன காலை நிகழ்வில் நிகழ்ந்தன.
மதிய அமர்வில் “மலையாள மொழியும் விக்கியூடகத்திட்டங்களும்-கொடுத்துப்பெறுதல்”என்னும் கருத்தரங்கமும் உரைவீச்சுகளும் மலையாளம் அல்லா விக்கிப்பீடியர்களுடனான விவாதமும் விக்கி நட்பகம் குறித்த கலந்துரையாடலும் நடைபெற்றன. மாலை நிகழ்வில் பண்பாட்டு நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
மாலை நிகழ்வில் இந்திய மொழிகளின் விக்கிப்பீடியர்கள் தங்கள் அனுவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்த அமர்வில் இந்திய மொழிகளில் விக்கிமீடியா திட்டங்களின் எதிர்காலத்திட்டங்கள் குறித்து பயனர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்தனர்.
திசம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை அன்று கருத்தரங்கமும், மலையாளத்தில் விக்கிப்பீடியா தொகுத்தல் மற்றும் தட்டச்சுப் பயிலரங்கமும் நிகழவுள்ளது. மதிய அமர்வாக "தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு பட்டறிவு" என்னும் தலைப்பில் அ. இரவிசங்கரின் உரைவீச்சும் வினா - விடை கலந்துரையாடல்களும் நிகழ உள்ளன. தேநீர் இடைவேளைக்குப்பிறகு ஆங்கில உரைவீச்சுகளும், விக்கி நட்பக கலந்துரையாடலும் மாலையில் நிகழ்வு நிறைவு விழாவும் நிகழ உள்ளது.
திசம்பர் 23, ஞாயிற்றுக்கிழமை அன்று கருத்தரங்கம் இல்லாத நிகழ்வாக விக்கி - நீருலா காலை 8.00 மணிக்கு தொடங்கி மாலை 6.00 மணி வரை நடைபெறும்.
காட்சிக்கூடம்
தொகு-
விக்கி சங்கமோற்சவம் பதாகை
-
பங்கேற்பாளர்கள்
-
மாணவர்ப் பங்கேற்பு
-
மாற்றுத் திறனாளிகளுக்கான பயிற்சியில்
-
பங்கேற்பாளர்கள்
-
பதிவு
-
பங்கேற்பாளர்கள்
-
உரைவீச்சு
-
மாணவர்களுக்குச் சான்றளிக்கும் நிகழ்வு
-
பங்கேற்பாளர்கள்
-
அறிவிக்கை
-
பின்னூட்ட அமர்வு