பொசுனியாவில் மிகப்பெரும் மனிதப் புதைகுழி கண்டுபிடிப்பு

வெள்ளி, நவம்பர் 1, 2013

1990களில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் படுகொலை செய்யப்பட்டவர்கள் என நம்பப்படும் 360 பேரின் மனித எச்சங்கள் பொசுனியாவில் கண்டுபிடிக்கப்பட்டன.


பொசுனியாவின் வட-மேற்கே தொமாசிக்கா என்ற கிராமத்திலேயே இப்புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுப் போரின் போது பொசுனிய செர்பியப் படைகளினால் செர்பியரல்லாதோர் கைது செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.


பொசுனிய முசுலிம்கள், மற்றும் குரொவாசிய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என மேலும் 1,000 பேரின் எச்சங்களும் கண்டுபிடிக்கப்படலாம் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


போர்க்குற்றங்களுக்காக இப்பகுதியில் இருந்த 16 பொசுனிய செர்பியர்கள் இதுவரை குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். பிரிஜிடோர் என்ற அயல் நகரத்தில் பொசுனிய செர்பியர்கள் பெருமளவு வாழ்ந்து வந்தனர். இப்பகுதியில் உள்ள சிறைக்கூடங்களில் பொசுனிய சேர்பியர்களினால் இக்குற்றங்கள் இழைக்கப்பட்டன.


பொசுனிய-எர்செகோவினாவின் ஏனைய சில பகுதிகளில் பொசுனிய முசுலிம்களினாலும், பொசுனிய குரொவாசியர்களினாலும் பொசுனிய செர்பியர்கள் மீது குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன.


மூலம் தொகு