பெரியார் பல்கலைக்கழகத்தில் நாட்டு வளர்ச்சியில் உயிரி அறிவியல் தேசிய கருத்தரங்கு

திங்கள், மார்ச்சு 2, 2015

சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தில் பெப்ருவரி 27, 28 ஆகிய இரு நாட்களில் நாட்டு வளர்ச்சியில் உயிரி அறிவியல் என்னும் தேசியக் கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் தாவரவியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் எஸ். முருகேசன் வரவேற்புரை வழங்கினார். விலங்கியல் துறையின் பேராசிரியர் சௌ. கண்ணன் இக்கருத்தரங்கம் குறித்த நோக்கவுரை நிகழ்த்தினார். பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. சுவாமிநாதன் தலைமையுரை நிகழ்த்தினார். அறிவியல், தொழிற்நுட்ப இயக்கத்தைச் சார்ந்த முனைவர் சி. இராஜதுரை இந்தியாவின் வளர்ச்சியில் அறிவியலின் பங்கு என்பது குறித்துப் பேசினார். இந்நிகழ்வில் கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் என். தர்மராஜ், நானோ இலைகளின் பயன்பாடுகள் குறித்து சிறப்புரையாற்றினார். மதிய அமர்வில் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை அறிவியலர் சஞ்சீவ் குப்தா இந்தியாவில் தோல் பதனிடுதல் குறித்து சிறப்புரையாற்றினார். இக்கருத்தரங்கில் மாணவர்கள் ஒருங்கிணைத்த அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.