பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்க்கணினி தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்க 2ஆம் கட்டப்பயிற்சி
புதன், அக்டோபர் 30, 2013
- 17 பெப்ரவரி 2025: பனாமா பேப்பர் விவகாரம் உலகின் அதிகாரமிக்கவர்களின் வரி ஏய்ப்பை காட்டியுள்ளது
- 17 பெப்ரவரி 2025: அண்டத்தின் அழகி பட்டம் தவறுதலாக பிலிப்பைன்சு அழகிக்கு பதில் கொலம்பியா அழகிக்கு தரப்பட்டது
- 17 பெப்ரவரி 2025: பெரியார் பல்கலைக்கழகத்தில் நூறு மாணவர்கள் பங்கேற்ற விக்கியூடக மின் ஆவணவாக்கப் பயிலரங்கம்
- 17 பெப்ரவரி 2025: சேலம் நடுவண் சிறையில் தமிழ்க்கணிமை, திறவூற்று மென்பொருள் பயிலரங்கம்
- 17 பெப்ரவரி 2025: சேலம் நடுவண் சிறை அலுவலகப் பணியாளர்களுக்கு தமிழ்க்கணிமைப் பயிலரங்கம்
பெரியார் பல்கலைக்கழக வாழ்வியப்பணி வழிகாட்டி மற்றும் பணியமர்த்தல் மையமும் தமிழக அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையும், விக்கிப்பீடியாவும், சேலம் சுழற்சங்கமும் இணைந்து “தமிழ்க் கணினி மற்றும் விக்கிப்பீடியா பயிலரங்கத்தை” பெரியார் பல்கலைக்கழகத்தில் 26.10.2013 அன்று 400 பயனர்கள் பங்கேற்புடன் ஒருங்கிணைத்தது. இப்பயிலரங்கத்தின் தொடர்ச்சியாக எதிர்வரும் 09.11.2013 சனிக்கிழமை அன்று காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை இரண்டாம் கட்ட பயிலரங்கனை நிகழ்த்த உள்ளது.
இப்பயிற்சியானது, சேலம் பகுதியைச்சார்ந்த பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு “தமிழ்க்கணினி மற்றும் தமிழ் விக்கிப்பீடியா” தொகுப்புப்பணிகளில் ஈடுபாட்டை ஏற்படுத்தவும் தமிழ் விக்கிப்பீடியாவின் திட்டங்களில் அனைவரும் பங்கேற்கும் வகையில் எளிய செய்முறை விளக்கம் அளிக்க வேண்டும் என்பதையும் நோக்கங்களாகக் கொண்டு நடத்தப்படுகிறது. இப்பயிலரங்கில் முதல்கட்டப்பயிற்சி பெற்றவர்களுக்கு கூடுதல் சிறப்புப்பயிற்சியும், இரண்டாம் கட்ட பயிலரங்கில் பங்கு பெறுவோருக்கு அடிப்படைப்பயிற்சியும் அளிக்கப்படும். இப்பயிரங்கில் ஊடகத்துறை, புகைப்படக்கலைஞர்கள், தட்டச்சர்கள், மகளிர் மற்றும் மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு தனிப்பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பயிலரங்கில் பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதி சிறப்புரையாற்ற உள்ளார்.
இப்பயிலரங்கில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்களின் பெயரை பெரியார் பல்கலைக்கழக வாழ்வியப்பணி வழிகாட்டி மற்றும் பணியமர்த்தல் மையத்தில் நேரிடையாக வேலைநாட்களில் அலுவலக நேரத்தில் அல்லது தமிழகம்.வலை என்னும் வலைதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிலரங்கம் குறித்து மேலும் விவரம் தேவைப்படுவோர் +91-9750933101, +91-9442105151 ஆகிய இரு எண்களில் தொடர்பு கொள்ளலாம். பெயர்ப்பதிவு செய்து கொண்டவர்களுக்கு நிகழ்வில் பங்கேற்க முன்னுரிமை அளிக்கப்படும். மின்னஞ்சல் வாயிலாக பதிவு செய்துகொள்ள விரும்புபவர்கள் rvenkatachalapathy@gmil.com -க்கு மின்னஞ்சல் அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு பெரியார் பல்கலைக்கழக புவியமைப்பியல் துறை பேராசிரியர், ஒருங்கிணைப்பாளர் மற்றும் வேலை வாய்ப்பு அலுவலர் முனைவர் இரா.வெங்கடாசலபதி அவர்களை 9750933101, 9150158111, 9442105151, 8925770849, 9629494522 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.