பீகாரில் தொடருந்துப் பாதையைக் கடக்க முயன்ற 37 பேர் விரைவு வண்டி மோதி உயிரிழப்பு

திங்கள், ஆகத்து 19, 2013

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் தொடருந்து நிலையம் ஒன்றில் பாதையைக் கடந்து செல்ல முயன்றோரில் குறைந்தது 37 பேர் விரைவுத் தொடருந்து மோதி உயிரிழந்தனர்.


தமாரா கட் தொடருந்து நிலையத்தில் உள்ளூர் தொடருந்து ஒன்றில் இருந்து இறங்கி பாதையைக் கடந்து சென்றோரே இவ்வாறு உயிரிழந்தனர். இவர்கள் சகார்சா மாவட்டத்தில் உள்ள இந்துக் கோயில் விழா ஒன்றில் பங்கு பற்றுவதற்காக சென்று கொண்டிருந்தனர். இச்சம்பவம் இன்று காலை உள்ளூர் நேரம் 08:40 மணிக்கு இடம்பெற்றுள்ளது.


இக்கோர விபத்தை அடுத்து அங்கிருந்த ஏனையோர் தொடருந்துச் சாரதியைத் தாக்கி தொடருந்தின் இரண்டு பெட்டிகளைத் தீ வைத்துக் கொளுத்தினர்.


இச்சம்பவத்தை அடுத்து மீட்புப் பணியாளர்களும் காவல்துறையினரும் அவ்விடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர். உடல்கள் சிதறிப் போனதால் எத்தனை பேர் இறந்துள்ளார்கள் என்பதைக் கணக்கெடுக்க முடியவில்லை என மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


மூலம்

தொகு