நோய்த் தடுப்புள்ள உலகின் முதலாவது மரபணு மாற்றப்பட்ட கோழி உருவாக்கப்பட்டது

வெள்ளி, சனவரி 14, 2011

பறவைக் காய்ச்சலைப் பரப்பாத மரபணு மாற்றப்பட்ட கோழி ஒன்றை உலகில் முதன் முறையாக ஐக்கிய இராச்சிய அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ளனர்.


சயன்ஸ் ஆய்வு இதழில் இது பற்றிய ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. நோய்க்கிருமிகளுக்கு எதிர்ப்புத்தன்மையுள்ள மரபணு மாற்றப்பட்ட பல்வேறு வகையான உயிரினங்களை தயாரிக்க தமது ஆய்வு முடிவுகள் வழிவகுக்கின்றன என அவர்கள் தெரிவிக்கின்றனர்.


செயற்கை மரபணு ஒன்று கோழிகளுக்குச் செலுத்தப்பட்டது. இதன் மூலம் அக்கோழிகளின் உயிரணுக்கள் மிகச் சிறிய அளவு பறவைக் காய்ச்சல் தீநுண்மத்தைப் பெற்றுக் கொள்கின்றன. இதன் மூலம் இப்பறவைகள் நோய்க்கிருமிகளால் பாதிக்கப்பட்டவை ஆகின்றன, ஆனால் அவை ஏனைய பறவைகளுக்கு எவ்விதத் தீங்கும் விளைவிக்கா.


தமது இந்த முறை மூலம் ஏனைய கோழிகள் மற்றும் கோழிகளை உண்ணும் மனிதர்களுக்கு எவ்வித நோய்க்கிருமிகளும் தொற்றாது என இவ்வாய்வுக் குழு நம்புகிறது.


மரபணு மாற்றப்படுதல் முறை தடுப்பூசி ஏற்றுதலை விட நோய்த்தடுப்புக்கு சிறந்த முறை என எடின்பரோ பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹெலன் சாங் தெரிவித்தார்.


மூலம்