நேபாளத்தைச் சேர்ந்த டான்ச்சி உலகின் மிகக் குள்ளமான மனிதர்

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

செவ்வாய், பெப்பிரவரி 28, 2012


நேபாளத்தைச் சேர்ந்த 72 வயது முதியவரான சந்திரபகதூர் டான்ஜி என்பவர் உலகில் வாழும் மிகக் குள்ளமான மனிதராக கின்னசு நிறுவனத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கின்னஸ் உலக சாதனை நிறுவன அதிகாரிகள் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு இலண்டனில் இருந்து காத்மாண்டு வந்து டான்ஜியின் உயரத்தை ஒரே நாளில் 3 தடைவை அளந்தனர். அவரின் உயரம் 21.5 அங்குலம் (54.6 சமீ) மட்டுமே. தற்போது இவர் மிக குள்ளமான மனிதர் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.


இதற்கான அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கு முன்பு இந்தியாவைச் சேர்ந்த குல் முகமது என்பவர் மிகக் குள்ளமான மனிதர் என்ற பட்டம் பெற்று இருந்தார். இவரது உயரம் 57 சமீ. தனது கின்னசு சாதனை பற்றி டான்ஜி கூறும்போது, "இப்பட்டம் பெற்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது," என்றார்.


இதுவரை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற மிக குள்ளமானவர்களிலேயே டாங்கிக்கு தான் அதிக வயthaakum. வெளிநாடுகளுக்கு செல்லவும், உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க விரும்புவதாகவும் டான்ஜி தெரிவித்துள்ளார்.


மூலம்

தொகு