தென்னாப்பிரிக்காவின் அரசுப் பள்ளிகளில் மீண்டும் தமிழ் மொழிப்பாடம் கற்றுத் தரப்படும்
சனி, ஏப்பிரல் 12, 2014
- 4 சனவரி 2018: தென் ஆப்பிரிக்க தொடருந்து விபத்தில் குறைந்தது 14 பேர் பலி
- 13 ஏப்பிரல் 2014: தென்னாப்பிரிக்காவின் அரசுப் பள்ளிகளில் மீண்டும் தமிழ் மொழிப்பாடம் கற்றுத் தரப்படும்
- 11 திசம்பர் 2013: நெல்சன் மண்டேலாவின் உடலுக்கு உலகத் தலைவர்கள் அஞ்சலி
- 6 திசம்பர் 2013: தென்னாப்பிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலா காலமானார்
- 13 சூன் 2013: தென்னாப்பிரிக்க முன்னாள் தலைவர் நெல்சன் மண்டேலாவுக்கு தொடர்ந்து சிகிச்சை
தென்னாப்பிரிக்காவில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் உள்ளிட்ட 5 இந்திய மொழிகள் மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்துவரும் இந்திய வம்சாவளி மக்களின் கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, குஜராத்தி, உருது ஆகிய மொழிகள் இந்திய வம்சாவளியினர் அதிகளவு வசிக்கும் கவாசுலு - நடால் மாகாணத்தில் மூன்றாவது மொழிப் பாடமாக, கற்பிக்கப்படும். இது விருப்பப்பாடமாக இருக்கும்.
தென்னாப்பிரிக்காவின் பள்ளிகள் சிலவற்றில் இந்திய மொழிகளுக்கான வகுப்புகள் நடந்து வந்தபோதிலும், இப்போதுதான் 5 மொழிப் பாடங்களை அங்கீகரிக்க அரசு முன்வந்துள்ளது. பள்ளிப்படிப்பு இறுதிவரை இந்த மொழிப்பாடங்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பாடத்திட்டங்களாக இருக்கும்
மூலம்
தொகுதென்னாப்பிரிக்க பாடத்திட்டத்தில் மீண்டும் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள், தி இந்து (தமிழ்),