துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது
ஞாயிறு, அக்டோபர் 2, 2011
- 14 சூன் 2014: 2014 உலகக்கிண்ணக் கால்பந்து: நெதர்லாந்திடம் நடப்பு உலக வாகையர் எசுப்பானியா தோல்வி
- 26 சனவரி 2014: ஆஸ்திரேலிய ஓப்பன் 2014: சுவிஸ் நாட்டின் வாவ்ரிங்கா வெற்றி
- 5 ஆகத்து 2013: சிப்ரால்ட்டர் தொடர்பில் எசுப்பானியாவிற்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையில் முறுகல்
- 25 சூலை 2013: எசுப்பானியாவில் தொடருந்து தடம் புரண்டதில் குறைந்தது 78 பேர் உயிரிழப்பு
- 7 சூலை 2012: சதுரங்கத்தில் 25 ஆண்டுகளுக்கு பின் கார்ப்போவை வென்றார் காசுப்பரோவ்
எசுப்பானியாவின் தலைநகர் மாட்ரிட் நகரில் அமைந்துள்ள புனித மேரி தேவாலயத்திற்குள் புகுந்த இனந்தெரியாத நபரொருவர் பிராத்தனையில் ஈடுபட்டிருந்த 2 பெண்களை சுட்டுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கி சூடுபட்ட நிறைமாத கர்ப்பணிப் பெண்ணொருவர் இத்தாக்குதலில் இறந்தார். இருப்பினும் அப்பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது.
இச்சம்பவம் நேற்று முன்தினம் மாட்ரிட் புனித மேரி தேவாலயத்தில் 40க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பிராத்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இடம்பெற்றது.
36 வயதுள்ள தாய் அதிர்ச்சியில் இறந்துள்ள நிலையில், கர்ப்பத்தில் இருந்து மீட்கப்பட்ட குழந்தைக்கும் அதிர்ச்சி மற்றும் ஆக்சிஜன் குறைப்பாட்டால் உடல்நிலை பாதிக்கப்படலாம் என டாக்டர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மீட்கப்பட்ட குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.
மர்மநபர் தேவாலயத்திற்கு வந்து எதற்காக சுட்டார் என்ற காரணம் தெரியவில்லை. சுட்ட நபருக்கு ஏற்கனவே போதை கடத்தல், சிறையில் இருந்து தப்புதல் மற்றும் உள்ளுர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.
மூலம்
தொகு- துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது, மாலைமலர், அக்டோபர் 2, 2011
- துப்பாக்கி சூட்டில் கர்ப்பணி பலி; குழந்தை உயிருடன் மீட்பு, ஒன்இந்தியா, தமிழ், அக்டோபர் 2, 2011