திருநெல்வேலி தூய சவேரியார் கல்லூரியில் 'நா. வானமாமலை' நாள்

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

வெள்ளி, பெப்பிரவரி 1, 2013

திருநெல்வேலி தூய சவேரியார் கல்லூரி (தன்னாட்சி)யின் நாட்டார் வழக்காற்றியல் துறையும் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையமும் நெல்லை ஆய்வுக்குழுவும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் இணைந்து, பேராசிரியர் நா. வானமாமலை அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, நிகழ்த்தும் "நா. வா. நாள்" என்னும் நிகழ்வு, பிப்ரவரி, 01, 2013 அன்று தூய சவேரியார் கல்லூரியின் லொயோலா அரங்கில் காலை 9.30 மணி முதல் நிகழ உள்ளது.


காலை 9.30 மணிக்கு ஒயிலாட்ட அரங்கேற்றத்துடன் நிகழ்வை தொடங்கி வைப்பவர் நியூ செஞ்சுரி புத்தக நிறுவன மதுரை மண்டல மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒயிலாட்ட நிகழ்வை ஒருங்கிணைப்பவர், ஒயிலாட்ட பயிற்சியாளர் கலைமாமணி கைலாசமூர்த்தி.


காலை 10.00 மணிக்கு சொற்பொழிவு அமர்வு, தூய சவேரியார் கல்லூரி அருள்திரு முனைவர் ஆ. ஜோசப் தலைமையில் நிகழ உள்ளது. தமிழில் அச்சேறிய இதழ்கள் என்னும் பொருண்மையில், புதிய தலைமுறை கல்வியின் இணை ஆசிரியர் பொன். தனசேகரன் உரை நிகழ்த்த உள்ளார்.


பேராசிரியர் நா. வானமாமலை (1917 - 1980) தமிழர் நாட்டார் வழக்காற்றியல் முதன்மை ஆய்வாளர்களில் ஒருவர். தமிழரிடையே வழங்கி வந்த நாட்டார் பாடல்களை, கதைகளை, பழமொழிகள், வழக்கங்களை சேகரித்து பதிப்பித்தார்.