தமிழகம் உட்பட பல மாநிலங்களுக்கு புதிய ஆளுனர்கள் நியமனம்

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

வெள்ளி, ஆகத்து 26, 2011

தமிழ்நாடு மாநிலத்தின் புதிய ஆளுனராக ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் கொனியேட்டி ரோசையா நியமிக்கப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் இம்முடிவுகளை இன்று அறிவித்தார்.


ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுனர் பாரூக் மரைக்காயர் கேரள மாநில ஆளுனராக மாற்றப்பட்டுள்ளார். பாரூக் மரைக்காயர் புதுச்சேரியின் முதல்வராக மூன்று முறை இருந்துள்ளார். சையத் அகமது ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மகாராட்டிர மாநிலத்தின் ஆய அமைச்சராக பதவியில் இருந்துள்ளார். உத்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் இராம் நரேஷ் யாதவ் அவர்களை மத்தியப் பிரதேசத்தின் ஆளுனராக குடியரசு தலைவர் நியமித்துள்ளார். வக்கம் புருசோத்தமன் மிசோரம் மாநிலத்தின் ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதய மகாராட்டிர மாநில ஆளுனர் சங்கரநாராயணன் கோவா மாநில ஆளுனர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சங்கரநாராயணன் மற்றும் பாரூக் மரைக்காயர் இருவரும் தங்கள் பதவிக்காலம் முடியும் சனவரி 2015 வரை புதிய பொறுப்பில் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மூலம்

தொகு