தஜிகிஸ்தானில் போராளிகளின் தாக்குதலில் 23 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்

திங்கள், செப்டெம்பர் 20, 2010

தஜிகிஸ்தானின் கிழக்குப் பகுடியில் இசுலாமியப் போராளிகள் நடத்திய தாக்குதலில் 23 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை அன்று தலைநகர் துசான்பேயில் இருந்து 250 கிமீ கிழக்கே ராச்ட் பள்ளத்தாக்கில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.


கடந்த மாதம் சிறியில் இருந்து தப்பிய போராளிகள் தப்பியதை அடுத்து ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதியில் போடப்பட்டிருந்த சாலை மறிப்புகளில் பாதுகாப்புக் கடமைக்காக இராணுவத்தினர் சென்று கொண்டிருந்த போது அவர்கள் தாக்கப்பட்டனர். மேலும் பலர் இத்தாக்குதலில் காயமடைந்ததாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பரிதுன் மக்மதாலியெவ் தெரிவித்தார்.


இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மற்றும் செச்சினியாவைச் சேர்ந்த போராளிகளும் அடங்குவர் என அவர் தெரிவித்தார். "இவர்கள் தமது தாக்குதல்களுக்கு இசுலாமிய சமயத்தைத் தமது பாதுகாப்பாகக் கருதுகின்றனர்.," என அப்பேச்சாளர் கூறினார்.


1990களில் மாஸ்கோ சார்பு தஜிகிஸ்தான் அரசு இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான போரை ஆரம்பித்திருந்தது. முன்னாள் சோவியத் மத்திய ஆசியக் குடியரசான தஜிகிஸ்தான் இசுலாமியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ளது.


சென்ற மாத சிறை உடைப்பில் தப்பிய 25 போராளிகளில்7 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புள்ள செய்திகள் தொகு

மூலம் தொகு