டிசம்பர் இசை விழா 2014 சென்னையில் இன்று தொடங்குகிறது

திங்கள், திசம்பர் 1, 2014

உலகின் மிகப்பெரிய கலை விழாக்களில் ஒன்றான சென்னை டிசம்பர் இசை விழா, சென்னையில் இன்று தொடங்குகிறது.


சென்னை தி. நகரில் அமைந்துள்ள பாரத் கலாச்சார் கலைமன்றத்தின் 28ஆவது மார்கழி மகோத்சவ் நேற்று முறைப்படி துவக்கி வைக்கப்பட்டது. கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் நடத்தும் 40ஆவது ஆண்டு கலைவிழா 2014, ஜெயா தொலைக்காட்சி நடத்தும் மார்கழி உத்சவம் 2014, ஸ்ரீ ராம பக்த ஜன சமாஜ் நடத்தும் 18ஆவது ஆண்டு இசை விழா 2014 ஆகியன இன்று ஆரம்பமாகின்றன.


பிற கலைமன்றங்கள் நடத்தும் விழாக்கள், அடுத்து வரும் நாட்களில் தொடங்குமென நாளிதழ்களில் வெளியாகியுள்ள அறிவிப்புகள், விளம்பரங்கள் மற்றும் நகரத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மூலமாக தெரியவருகிறது.


மூலம்

தொகு
  • Music, தி இந்து, டிசம்பர் 1, 2014
  • Schedules 2014, சென்னைடிசம்பர்சீசன்.காம், டிசம்பர் 1, 2014