டிசம்பர் இசை விழா 2013: பாரத் கலாச்சார் மன்றத்தின் நிகழ்ச்சி நிரல் வெளியாகியுள்ளது

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

புதன், நவம்பர் 27, 2013

சென்னை டிசம்பர் இசை விழாவினை பெரிய அளவில் நடத்தும் கலை மன்றங்களில் ஒன்று பாரத் கலாச்சார் ஆகும். 2013 ஆம் ஆண்டின் இசை விழா குறித்த இந்த அமைப்பின் முழுமையான நிகழ்ச்சி நிரல், இதன் இணையத்தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.


பாரத் கலாச்சார் மன்றத்தின் 27 ஆவது 'மார்கழி மகோத்சவ்' விழா நிகழ்ச்சிகள், டிசம்பர் 1, 2013 முதல் சனவரி 14, 2014 வரை நடைபெறுகின்றன. ஏறத்தாழ 45 நாட்கள் நடக்கவிருக்கும் இவ்விழாவில் இசை நிகழ்ச்சிகளோடு பரத நாட்டிய நிகழ்ச்சிகளும், மேடை நாடகங்களும் இடம்பெறுகின்றன.


சென்னை நகரின் தியாகராயர் நகரப் பகுதியில் அமைந்துள்ள சிறீ ஒய். ஜி. பி. கலையரங்கத்தில் இவ்விழா நடைபெறும். திசம்பர் 1 முதல் திசம்பர் 10 வரையிலான காலகட்டத்தில் நுழைவுச்சீட்டின்றி நேயர்கள் இவ்விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாக்காலம் முழுமைக்குமான நுழைவுச்சீட்டுக் கட்டணம் இந்திய உரூபாய் 8000 என அறியப்படுகிறது. சீசன் டிக்கெட் என்றழைக்கப்படும் இச்சீட்டினை முன்பதிவு முறையில் பெற்றுக் கொள்ளல் வேண்டும். இதைத் தவிர அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு, இருப்பிற்குத் தகுந்தபடி நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படும். உரூபாய் 500, 300, 200, 100 எனும் கட்டண வகைகளில் இந்த சீட்டுகள் வழங்கப்படும்.


மூலம்

தொகு