ஜெய்ப்பூரில் தொடருந்து தடம் புரண்டதில் 7 பேர் உயிரிழப்பு

சனி, நவம்பர் 14, 2009


இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர் நகருக்கருகே கடுகதி பயணிகள் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 7 பேர் கொல்லப்பட்டு பலர் படுகாயமடைந்தனர்.


இன்று அதிகாலை 1:30 மணியளவில் ஜோத்பூருக்கும் டெல்லிக்கும் இடையில் சென்றுகொண்டிருந்த மண்டோர் கடுகதியின் அனைத்து 15 பெட்டிகளும் பன்ஸ்கோவ் ரெயில் நிலையத்துக்கு அருகே திடீரெனத் தடம் புரண்டன.


இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து, தொடருந்துப் பெட்டியை வெல்டிங் மூலம் உடைத்து தண்டவாளத்தின் கம்பிகளை அகற்றினார்கள்.


காயமடைந்தவர்களில் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த அனா எலிசபத் என்ற பெண் பயணியும் ஒருவராவார்.


கடந்த வாரம், உத்தரப் பிரதேசத்தில் பயாணிகள் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 14 பேர் கொல்லப்பட்டனர். மேலும், சென்ற அக்டோபரில் வட இந்தியாவின் மதுராவில் இரு தொடருந்துகள் மோதியதில் 22 பேர் கொல்லப்பட்டனர்.

மூலம் தொகு