ஜெயா தொலைக்காட்சியின் இசை விழா: சஞ்சய் சுப்ரமணியனின் வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சி

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

வெள்ளி, திசம்பர் 6, 2013

ஜெயா தொலைக்காட்சி நடத்தும் மார்கழி மகா உற்சவம் இசை விழாவில் பிரபல கருநாடக இசைப் பாடகர் சஞ்சய் சுப்ரமணியனின் வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. சென்னையின் ஆர். ஏ. புரம் பகுதியிலுள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியின் கலையரங்கத்தில் நடைபெற்றுவரும் இசை விழாவின் ஒரு பகுதியாக இந்த இசை நிகழ்ச்சி நடந்தது.


சஞ்சய் சுப்பிரமண்யன்

மாலை 6.30 மணிக்குத் தொடங்கிய நிகழ்ச்சி இரவு 8.35 மணிக்கு நிறைவடைந்தது. ஜெயா தொலைக்காட்சி நடத்தும் இசை விழாவில் பிரபல பாடகர்களின் நிகழ்ச்சிகள் அனைத்திலும் ஏதேனும் ஒரு கருப்பொருளினை எடுத்துக்கொண்டு, அது தொடர்பான பாடல்களைப் பாடும் நடைமுறை உள்ளது. அந்த வகையில் இன்று சஞ்சய் எடுத்துக்கொண்ட கருப்பொருள், திவ்யப் பிரபந்தம் ஆகும். எட்டு ஆழ்வார்களின் பாடல்கள் ஒன்று வீதம் ஆக மொத்தம் எட்டு பாடல்களை ஒன்றன்பின் ஒன்றாக சஞ்சய் சுப்ரமண்யன் பாடினார். இறுதியாக மற்ற நான்கு ஆழ்வார்களின் ஒவ்வொரு பாடலை இராகமாலிகையாக கோர்த்து, விருத்தம் பாடி, நிகழ்ச்சியினை நிறைவு செய்தார் சஞ்சய்.


தொடர்புள்ள செய்திகள்

தொகு