ஜெசிகா லால் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

திங்கள், ஏப்பிரல் 19, 2010

ஜெசிகா லால் கொலை வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் விநோத் சர்மாவின் மகன் மனு சர்மா என்வருக்கு எதிராக புதுதில்லி நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.


ஜெசிகா கொலை வழக்கில் முறையான தீர்ப்பு வழங்க நடைபெற்ற பரப்புரை

பினா ரமணி என்பவருக்கு சொந்தமான உணவு விடுதி ஒன்றில் மது பானம் பறிமாறும் பணிப்பெண்ணாக ஜெசிகா லால் என்பவர் வேலை செய்து வந்தார். சம்பவதினமான ஏப்ரல் 29,1999 பினா ரமணி விருந்தோம்பல் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தார். அன்று இரவு இரண்டு மணியளவில் விடுதிக்கு வந்த மனு சர்மா ஜெசிகாவிடம் மது பானம் கேட்டுள்ளார். ஆனால் அவர் மறுத்துள்ளார். அதனால் கோபமடைந்த மனுசர்மா தனது கைத்துப்பாக்கியால் சுட்டதில் மனு சர்மா படுகாயமடைந்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.


இரண்டு நாட்களுக்குப் பின் மனுசர்மா பயன்படுத்திய சபாரி கார் நோய்டா அருகே நிராதரவாக விடப்பட்டது.


பிப்ரவரி 2006ல் விசாரணை நீதிமன்றம் அவரை விடுவித்து தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தில்லி உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக திசம்பர் 2006ல் தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடாக மனு செய்திருந்தார். தில்லி உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கிய ஓய்வு பெற்ற நீதிபதி சோதி தீர்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஊடகங்களே இந்த வழக்கை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளன என்றும் தெரிவித்தார்.


இந்த வழக்கில் முக்கிய சாட்சிகளாக பினா ரமனியும் அவரது மகள் மாலினி ரமனியும் நடந்த சம்பவங்களை விவரித்து, மனு சர்மா மற்றும் அவரது கூட்டாளிகளை அடையாளப்படுத்தினர். தங்களுக்கு பல்வேறு வகையில் மிரட்டல்கள் வந்ததாகவும் தெரிவித்தனர்.


இந்த வழக்கில் இந்தியாவின் பிரபல மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி குற்றவாளி மனுசர்மாவிற்கு ஆதரவாக வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் அறிந்துகொள்ள

தொகு

Murder of Jessica Lall, ஆங்கில விக்கியில் ஜெசிக்கா லால் கொலை வ்ழக்கு விபரம்

மூலம்

தொகு