ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் தடை
புதன், சனவரி 13, 2016
- 17 பெப்ரவரி 2025: தமிழகத்தில் செப்.30 வரை தளர்வுகளுடன் இ-பாஸ் இல்லாத பொது முடக்கம் நீட்டிப்பு
- 17 பெப்ரவரி 2025: தூத்துக்குடி செய்தி இன்று
- 17 பெப்ரவரி 2025: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 17 பெப்ரவரி 2025: காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை
- 17 பெப்ரவரி 2025: நாட்டுபுறவியல் உதவி பேராசிரியர் பணி நாட்டுபுறவியல் மாணவர்களுக்கே
தமிழத்தில், பொங்கல் திருவிழாவின் ஒரு பகுதியாக ஜல்லிக்கட்டு எனும் தமிழர் வீரவிளையாட்டு காலங்காலமாக நடந்துவரும் நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த ஆண்டில் (2016) ஜல்லிக்கட்டு நடத்தப்பட அனுமதிக்கும்படி தமிழகத்தின் பல்வேறு கட்சிகளும், தமிழக அரசும் மத்திய அரசை வற்புறுத்தியது, இதைதொடர்ந்து இவ்வாண்டில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, மற்றும் மாட்டுவண்டி போட்டிகள் நடத்த மத்திய அரசு 2016 சனவரி 8-ம் திகதியன்று நிபந்தனையோடுகூடிய அனுமதி வழங்கியது.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதியளித்த மத்தியரசு உத்தரவுக்கு இந்திய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக பல அமைப்புகள் மேல்முறையீட்டின் அடிப்படையில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, என் வி ரமணா ஆகியோர் மத்திய அரசின் ஆணைக்கு இடைக்கால தடை விதித்துள்ளனர்.
மேலும், சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு அறிவிப்பு அளிக்க உத்தரவிட்டதோடு, இவ்வழக்கு விசாரணையை வரும் மார்ச் 15-ம் தேதிக்கு அவர்கள் ஒத்திவைத்துள்ளனர்.
இச்சூழலில், இந்த பொங்கல் பண்டிகைக்கே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடுத்துவதற்கு தேவையான அவசர சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு செவ்வாய்க் கிழமையன்று (12/01/2016), இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் மூலம் கோரிக்கையை முன்வைத்துள்ளது.