சோமாலியக் கடற்கொள்ளையர் 21 இந்திய மாலுமிகளையும் விடுவித்தனர்

ஞாயிறு, சனவரி 15, 2012

கடந்த ஆண்டு சோமாலியக் கடற்கொள்ளையர்களினால் 21 மாலுமிகளுடன் கைப்பற்றப்பட்ட எம்வி ஃபெயர்கெம் போகி என்ற இந்தியக் கப்பல் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


"21 மாலுமிகளும் நலமுடன் உள்ளனர், கப்பல் தற்போது பாதுகாப்பான துறைமுகம் ஒன்றை நோக்கிச் செல்லுகிறது," என இந்தியக் கப்பற்துறைப் பணிப்பாளர் எஸ். பி. அக்னிஹோத்ரி இந்திய ஊடகங்களுக்குக் கூறியுள்ளார்.


மார்சல் தீவுகளின் கொடியைத் தாங்கிய எண்ணெய்த் தாங்கிக் கப்பல் ஓமான் கரையை அடுத்த சலாலா துறைமுகத்தில் இருந்து ஓமான் கரையோரமாகப் பயணிக்கும் போது கடந்த ஆகத்து மாதத்தில் கடத்தப்பட்டது.


இந்திய மாலுமிகளை விடுவிக்க பெருமளவு பணம் கப்பமாகக் கொடுக்கப்பட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனாலும் இது பற்றி திரு. அக்னிஹோத்ரி தகவல் எதுவும் தர மறுத்து விட்டார்.


சோமாலியாவின் கிழக்குக் கரைப் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக சோமாலியக் கடற்கொள்ளையர்களின் தீவிரம் அதிகரித்து வந்துள்ளது.


மூலம் தொகு