சுவிஸ் வங்கியில் இந்தியக் கறுப்புப் பணமே அதிகம்

செவ்வாய், ஏப்பிரல் 26, 2011

சுவிஸ் வங்கிகளில் மற்ற நாடுகளின் பணத்தை விட இந்தியக் கறுப்புப் பணமே அதிகம் உள்ளது என்றும், அதுகுறித்து தகவல் தெரிந்தும் பணத்தை மீட்க இந்திய அரசு மெத்தனப் போக்கை காட்டுகிறது என்றும் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் தெரிவித்துள்ளார்.


விக்கிலீக்ஸ் இணையதளம் இந்தியர்களின் கறுப்புப் பண விவரங்கள், கணக்குகள் குறித்து பல தகவல்களை வெளியிட்டு வருகிறது. இதுகுறித்து கூறிய ஜூலியன் அசாஞ்ஜே உலகம் முழுவதும் உள்ள பல வங்கிகளில் இருந்து பலவிதமான தகவல்களை திரட்டி வருகிறோம். விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் மீது வங்கிகள்தான் அதிகளவில் வழக்குகள் தொடர்ந்துள்ளன. அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து தகவல்களை வெளியிடுவோம். இந்தியாவில் கருப்பு பணம் நடமாட்டம் அதிகம் உள்ளது. இந்தியாவில் இருந்துதான் கருப்பு பணம் அதிகம் வருகிறது. நாங்கள் திரட்டியுள்ள தகவல்களில் பல இந்தியர்களின் பெயர்கள் உள்ளன. இது பற்றி தொடர்ந்து விசாரித்து தகவல்கள் வெளியிடுவோம். கருப்பு பணம் வைத்துள்ள இந்தியர்களின் பட்டியல் ஒருநாள் நிச்சயம் வெளிவரும். கருப்பு பண விடயத்தில் ஜெர்மனி அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. வரிஏய்ப்பு செய்பவர்களின் பட்டியலை பெறுவதில் அமெரிக்காவும் முனைப்புடன் உள்ளது. அதேபோல இந்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.


மூலம் தொகு