சுவாசிலாந்தில் மனித உரிமைக்கான போராட்டங்களுக்கு முன்னோடியாகப் பலர் கைது

புதன், செப்டம்பர் 8, 2010

சுவாசிலாந்தில் திட்டமிடப்பட்ட மனித உரிமைக்கான எதிர்ப்புப் போராட்டங்களுக்கு முன்னோடியாக அங்கு ஐம்பதிற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். சுவாசிலாந்தில் மன்னராட்சிக்கு எதிராக இப்போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கைது செய்யப்பட்டோரில் சிலர் விடுவிக்கப்பட்டாலும் பலர் இன்னும் விடுவிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

பதின்மூன்று மனைவிகளை வைத்திருப்பதாக மன்னர் மூன்றாம் முசுவாத்தி குற்றம் சாட்டப்பட்டுள்ளார்

சுவாசிலாந்தின் மன்னர் மூன்றாம் முசுவாத்தி தனது பதின்மூன்று மனைவிகளுடன் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக அவர் பெரும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறார். பெரும்பாலான சுவாசி மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வது குறிப்பிடத்தக்கது. நாட்டில் 15 முதல் 49 வரையுள்ள மக்களின் 26 விழுக்காட்டினருக்கு எயிட்ஸ் நோய் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


பல தென்னாப்பிரிக்க தொழிற்சங்கவாதிகள் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.


ஆப்பிரிக்க நாடுகளில் முழுமையான மன்னராட்சி நிலவும் ஒரே நாடு சுவாசிலாந்து ஆகும்.

மூலம்

தொகு