சவூதியில் 2003 தாக்குதலில் ஈடுபட்ட ஐவருக்கு மரணதண்டனை தீர்ப்பு

செவ்வாய், ஏப்பிரல் 22, 2014

2003 ஆம் ஆண்டு மே மாதத்தில் வெளிநாட்டினர் வாழும் வசிப்பிடம் ஒன்றில் இடம்பெற்ற மூன்று தற்கொலைத் தாக்குதல்களில் சம்பந்தப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஐவருக்கு சவூதி அரேபிய நீதிமன்றம் ஒன்று மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. மேலும் 37 பேருக்கு 3 முதல் 35 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.


அல்-கைதா தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் 39 வெளிநாட்டினர் மற்றும் சவூதிகள் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து அந்நாட்டு அரசு ஜிகாத் குழுக்கள் மீது தீவிரக் கண்காணிப்பு நடத்தி ஆயிரகணக்கானோரைக் கைது செய்தது.


அல்-கைதா இயக்கத்தின் சவூதி உறுப்பினர்கள் தமது நாட்டில் இயக்கத்தை நடத்த முடியாவிட்டாலும், அயல் நாடான யெமனில் தொடர்ந்து தமது போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.


மூலம் தொகு