கொடைக்கானலில் இயேசு சபை மாணவர்களுக்கான தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பயிற்சி

வெள்ளி, மே 16, 2014

தமிழ்நாடு, கொடைக்கானலில் உள்ள தூய இதயக் கல்லூரியில் ஏசு சபை மாணவர்களுக்கான கோடை முகாம் நிகழ்ந்து வருகின்றது. இளங்கலை, முதுகலை மெய்யியல், இறையியல் மாணவர்கள் கலந்து கொண்டனர். இம்முகாமின் ஒரு அமர்வாக, இன்று வெள்ளிக்கிழமை ஏசு சபை மாணவர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பயிற்சி வழங்கப்பட்டது.


தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பயிற்சியை பெரியார் பல்கலைக்கழக இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை பேராசிரியர். மா. தமிழ்ப்பரிதி ஒருங்கிணைத்து, தமிழ்க்கணிமையின் தேவை, தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள், தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருள்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறியின் பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருள்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் என்பதான பொருண்மைகள் குறித்த கணினிவழி நேரிடை செயல்முறைப் பயிற்சியை அவர் அளித்தார்.


இம்முகாமினை தமிழக ஏசுசபை பயிற்சி ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை இராஜ் இருதயா ஒருங்கிணைத்தார்.


Wikinews
Wikinews
இக்கட்டுரை விக்கிசெய்திகளின் உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்ட நேரடிச் செய்தியாகும்.