கென்யாவின் வறண்ட துர்க்கானா பகுதியில் நீர்த்தேக்கம் கண்டுபிடிப்பு
புதன், செப்டெம்பர் 11, 2013
- 17 பெப்ரவரி 2025: அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் மீது ஆப்பிரிக்க ஒன்றியம் குற்றச்சாட்டு
- 17 பெப்ரவரி 2025: நைரோபி வணிக வளாகத் தாக்குதல், 69 பேர் உயிரிழப்பு, மேலும் பலர் பணயக் கைதிகளாகப் பிடிபட்டுள்ளனர்
- 17 பெப்ரவரி 2025: கென்யாவின் வறண்ட துர்க்கானா பகுதியில் நீர்த்தேக்கம் கண்டுபிடிப்பு
- 17 பெப்ரவரி 2025: கென்யாவின் காரிசா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தாக்குதலில் 70 பேர் பலி
- 17 பெப்ரவரி 2025: பெரும் தீயை அடுத்து நைரோபி விமான நிலையம் மூடப்பட்டது
கென்யாவின் வடக்கே துர்க்கானா வறண்ட பிரதேசத்தில் புதிய நிலத்தடி நீர்த்தேக்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 70 ஆண்டுத் தேவையை இது பூர்த்தி செய்யும் என கென்ய அரசு கூறியுள்ளது.
லொத்திக்கியுப்பி நீர்த்தேக்கம் செயற்கைக் கோள்கள், மற்றும் ரேடார்களின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்தேக்கத்தில் 200பில்லியன் கனலீட்டர் நீர் தேங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. யுனெஸ்கோவில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றில் கென்யாவின் சுற்றுச்சூழலுக்கான அமைச்சர் ஜூடி வக்குங்கு இதனை அறிவித்தார்.
கென்யாவின் மிகவும் வறண்ட பகுதிகளில் துர்க்கானாவும் ஒன்று. இங்கு வாழ்பவர்கள் பெரும்பாலும் நாடோடிகள் ஆவர். கென்யாவின் 41 மில்லியன் மக்கள்தொகையில் 17 மில்லியன் பேர் வரையில் போதிய குடிநீர் இன்றி அவதிப்படுகின்றனர் என யுனெஸ்கோவின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு நமீபியாவில் இவ்வாறான ஒரு நீர்த்தேக்கம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
மூலம்
தொகு- Kenya aquifer discovered in dry Turkana region, பிபிசி, செப்டம்பர் 11, 2013
- Kenya water discovery brings hope for drought relief in rural north, கார்டியன்,. செப்டம்பர் 11, 2013