கினி நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி

சனி, அக்டோபர் 19, 2013

கடந்த மாதம் கினியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் கினியின் அரசுத்தலைவர் அல்ஃபா கொண்டேயின் ஆளும் கட்சி அரைவாசிக்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


114 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் கினி மக்களுக்கான பேரணி 53 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. முக்கிய எதிர்க்கட்சி 37 இடங்களைக் கைப்பற்றியது. தேர்தலில் பல முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக பன்னாட்டுத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். தேர்தல் முடிவுகளைத் தாம் ஏற்கவில்லை என எதிர்க்கட்சி அறிவித்துள்ளது. தேர்தல் காலத்தில் இன, மத வன்முறைகள் இடம்பெற்றன.


2010 ஆம் ஆண்டு இராணுவ ஆட்சி முடிவுக்கு வந்ததை அடுத்து அங்கு இடைக்கால நாடாளுமன்றம் ஒன்று அமைக்கப்பட்டது. அதன் பின்னர் முதற்தடவையாக இப்போது தேர்தல்கள் இடம்பெற்றன.


2010 ஆம் ஆண்டில் நடந்த அரசுத்தலைவர் தேர்தலில் கொண்டே மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.


மூலம் தொகு