கால்பந்து 2010: காலிறுதிப் போட்டியில் உருகுவே அணி கானாவை வென்றது
சனி, சூலை 3, 2010
- 14 சூலை 2014: 2014 உலகக்கோப்பை காற்பந்து: செருமனி நான்காவது தடவையாக உலகக்கோப்பையை வென்றது
- 9 சூலை 2014: 2014 கால்பந்து உலகக்கிண்ணம்: பிரேசில் அரையிறுதியில் செருமனியிடம் 1:7 கணக்கில் தோற்றது
- 29 சூன் 2014: உலகக்கோப்பை கால்பந்து, 2014: அல்ஜீரியா முதற்தடவையாக இரண்டாம் சுற்றுக்குத் தெரிவானது
- 14 சூன் 2014: 2014 உலகக்கிண்ணக் கால்பந்து: நெதர்லாந்திடம் நடப்பு உலக வாகையர் எசுப்பானியா தோல்வி
- 13 சூன் 2014: 2014 உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டி பிரேசிலில் ஆரம்பமானது
1970 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற் தடவையாக உருகுவே நாட்டு அணி உலகக்கோப்பை கால்பந்து அரையிறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. நேற்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் பெனால்ட்டி முறையில் கானா தோல்வியடைந்தமை முழு ஆப்பிரிக்கக் கண்டத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கானா முதல் கோலை அடிக்க அரங்கில் குதூகலம் கரை புரண்டது. அடுத்த சில நிமிடங்களில் உருகுவே அதை சமன் செய்தது. அதன் பின் கடைசி நிமிடத்தில் கானாவின் டொமினிக் தலையால் முட்டி பந்தை கோலுக்கு அனுப்பினார். கோல்போஸ்டுக்கு உள்ளே நின்ற உருகுவே வீரர் லூயிஸ் சுவாரெஸ் அதை வேறு வழியின்றி கையால் தடுத்து நிறுத்தினார்.
கானா அணி கடைசி நிமிடம் வரை அரையிறுதிக்குத் தகுதி பெறும் என்றே பலரும் நினைத்திருந்தனர். முதல்பாதியின் 47வது நிமிடத்தில் கானாவின் சல்லி முன்டாரி ஒரு கோல் அடித்தார். இதனால் கானா 1-0 என்று முன்னிலை பெற்றது.
பிற்பாதியில் 55வது நிமிடத்தில் உருகுவே அணியின் தலைவர் போர்லான் ஒரு கோலை அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 சமநிலை கண்டது. 90 நிமிட ஆட்டத்திலும் இரு அணிகளும் வேறு கோல்கள் அடிக்கவில்லை.இதனால் கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது.
க்கூடுதல் நேரத்தில் கடைசி நிமிடத்தில் கானாவின் டொமினிக் தலையால் முட்டி பந்தை கோலுக்கு அனுப்பினார். கோல்போஸ்டுக்கு உள்ளே நின்ற உருகுவே வீரர் லூயிஸ் சுவாரெஸ் அதை வேறு வழியின்றி கையால் தடுத்து நிறுத்தினார்.
கடைசி நிமிடத்தில் சிகப்பு அட்டை பெற்ற சுவாரெஸ் மைதானத்தை விட்டு வெளியேறினார். கானாவுக்கு பெனால்டி உதை கிடைக்க அதை கானாவின் அசாமோ கயான் அதனை அடிக்க முடியாமல் போய் ஆட்டம் பெனால்ட்டிக்கு சென்றது. அதில் உருகுவே 4- 2 என்ற கணக்கில் வென்றது.
நேற்று இடம்பெற்ற மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து அணி பிரேசிலை வென்றது. ஜூலை 6 ஆம் நால் இடம்பெறும் அரை இறுதிப் போட்டியில் நெதர்லாந்துடன் உருகுவே மோதுகிறது.
மூலம்
தொகு- Uruguay 1-1 Ghana, பிபிசி, ஜூலை 2, 2010