உலகக்கோப்பை கால்பந்து, 2014: அல்ஜீரியா முதற்தடவையாக இரண்டாம் சுற்றுக்குத் தெரிவானது

சனி, சூன் 28, 2014

அல்ஜீரியாவின் தேசிய கால்பந்து அணி முதற்தடவையாக ஆட்டமிழக்கும் நிலையான இரண்டாம் சுற்றுக்குத் தெரிவானதை பல்லாயிரக்கணக்கான அல்ஜீரியர்கள் அந்நாட்டின் வீதிகளில் இறங்கிக் கொண்டாடினர்.


பிரேசிலில் நடைபெறும் உலகக்கிண்ணப் போட்டியில் உருசியாவுடன் 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்ததை அடுத்து மொத்தம் நான்கு புள்ளிகளை எடுத்த அல்ஜீரியா அடுத்த சுற்றுக்குத் தெரிவானது. உருசியா குழுநிலையில் இரண்டு புள்ளிகளை மட்டும் எடுத்து அடுத்த கட்டத்துக்குத் தெரிவாகவில்லை.


இரவு முழுவதும் வாணவேடிக்கைகளுடன் மக்கள் தமது குடும்பங்களுடன் கொண்டாடினர்.


அடுத்த சுற்றில் திங்கள் அன்று அல்ஜீரியா செருமனியுடன் மோத விருக்கிறது. 1982 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பைப் போட்டியில் மேற்கு செருமனி ஆஸ்திரியாவுடன் மோதி சமனாக ஆட்டத்தை முடித்துக் கொண்டது. இதனால் இரு அணிகளும் அடுத்த சுற்றுக்குத் தெரிவாகின. இதனால் அல்ஜீரியா இரண்டாம் சுற்றுக்குத் தெரிவாகவில்லை. மேற்கு செருமனி வேண்டுமென்றே இவ்வாறு சம்னாக ஆட்டத்தை முடித்துக் கொண்டதாக அப்போது குற்றம் சாட்டப்பட்டது. "அதனை நாம் இன்னமும் மறக்கவில்லை," என அல்ஜீரியப் பயிற்சியாளர் வாகிது அலில்கோட்சிச் கூறினார்.


மூலம் தொகு