கட்டுநாயக்க விமானநிலையத்தின் மீது வான்புலிகள் தாக்குதல் நடத்தினர்

திங்கள், மார்ச்சு 26, 2007

தமிழீழ விடுதலைப்புலிகள் இலங்கை தலைநகரதிற்கு அண்மையில் உள்ள கட்டுநாயக்க விமானபடைதளத்தின் மீது முதலாவது வான் தாக்குதலை நடாத்தியுள்ளனர்.உள்ளூர் இலங்கை நேரப்படி அதிகாலை 12.45 மணியளவில் புலிகளின் வான்படையை சேர்ந்த 2 இலகு ரக விமானங்கள் இத்தாக்குதலை நடாத்தியதாக புலிகளின் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.இவ் வீமான குண்டுவீச்சில் இலங்கை விமானபடையினர் மூவர் கொல்லப்பட்டும் 16 பேர் காயமுற்றும் உள்ளனர்.இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விமானங்களோ,ஒடுபாதைகளோ தாக்குதலில் சேதமடையவில்லை என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.


தமிழ் சிவிலியன்களை இலங்கை அரசின் வான் குண்டுதாக்குதலில் இருந்து பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையே இது

—இராசைய்யா இளந்திரயன் புலிகளின் படைதுறை பேச்சாளர்


இத்தாக்குதல் பற்றி இலங்கை தேசிய பாதுகாப்பிற்கான ஊடக நிலையம் வெளியிட்ட அறிக்கையில் "நிலமை முழுவது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.விடுதலைப்புலிகள் வடக்கிலும் கிழக்கிலும் அடைந்து வரும் தோல்விகளை மறைக்கவே இப்படியான கோழைத்தன்மான தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.இதனை நாம் வண்மையாக கண்டிக்கின்றோம் " என தெரிவிக்கப்பட்டுள்ளது.


புலிகளின் இராணுவ பேச்சாளரின் கருத்து வெளியிடும்போது "தமிழ் சிவிலியன்களை இலங்கை அரசின் வான் குண்டுதாக்குதலில் இருந்து பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையே,இதே பாணியிலான தக்குதல் மேலும் தொடவே செய்யும்" கூறினார்.

மேற்படி தக்குதலில் அருகே அமைந்துள்ள கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு எந்த வோரு சேதமும் ஏற்படவில்லை என தெரியவரிகின்றது.

இதற்கு முன்னரும் 2001 மாண்டிலும் கட்டுநாயக்க விமான படைத்தளமும்,விமான நிலயமும் தரைவழியான ஊடறுப்புத் தாக்குதலில் மோசமான அழிவிற்கு உள்ளானது.

உலகிலே சொந்தமாக விமானப்படையினை வைத்திருக்கும் ஒரே ஒரு கெரில்லா அமைப்பாக தற்போது விடுதலைப்புலிகள் இருக்கின்றனர்.

மூலம்

தொகு