உலங்கு வானூர்தி பரிவர்த்தனை ஊழல்: அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்துக்கு இந்திய அரசு எச்சரிக்கை

வெள்ளி, பெப்பிரவரி 15, 2013

இத்தாலியின் விமானத் தயாரிப்பு மற்றும் ஆயுதத் தளவாட நிறுவனமான ஃபின்மெக்கனிகாவின் துணை நிறுவனமான ‘அகஸ்டா வெஸ்ட்லாண்ட்’டுக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சகம், நேற்று விடுத்த ஒரு அறிக்கையின் வாயிலாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

வணிக பரிவர்த்தனையின்போது இந்திய நிறுவனத்துக்கோ அல்லது தனிப்பட்ட நபர்களுக்கோ கையூட்டு தரப்பட்டுள்ளதா என்று கேட்கப்பட்டுள்ள அறிக்கையில், தொடர்பான விவரங்களை அளிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறியிருந்தால் ‘வணிக உடன்படிக்கை இரத்து, செலுத்திய பணத்தைத் திரும்பப்பெறல், கறுப்புப்பட்டியலில் சேர்த்தல், சட்டபூர்வமான நடவடிக்கை’ போன்ற கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.


மூலம்

தொகு