உலகில் அதிகநாள் மன்னராக இருந்த தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யாதெச் மரணமடைந்தார்
வெள்ளி, அக்டோபர் 14, 2016
- 14 அக்டோபர் 2016: உலகில் அதிகநாள் மன்னராக இருந்த தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யாதெச் மரணமடைந்தார்
- 22 மே 2014: தாய்லாந்தில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது
- 20 மே 2014: தாய்லாந்தில் இராணுவச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது
- 8 மே 2014: தாய்லாந்து பிரதமர் யிங்லக் சினாவத்ரா பதவியில் இருந்து அகற்றப்பட்டார்
- 12 நவம்பர் 2013: பிரியா விகார் கோவில் பகுதி கம்போடியாவுக்கே சொந்தம், ஐநா நீதிமன்றம் தீர்ப்பு
உலகில் அதிகநாள் மன்னராக இருந்த தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யாதெச் உடல் நலக் குறைவால் வியாழக்கிழமை மரணமடைந்தார்.
1946இல் பதவியேற்று 70 ஆண்டுகள் பதவியில் இருந்தார். இறந்ததிற்கான காரணத்தை அரண்மனை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை எனினும் சென்ற ஆண்டு பல்வேறு உடல் நலக்கோளாறுகளால் அவதியுற்று மருத்துவமனையில் இருந்தார், உள்ளூர் நேரம் மாலை நான்கு மணி அளவில் மரணித்தார்.
பட்டத்து இளவரசர் வஜிரலோங்கோன் மன்னராக பொறுப்பேற்காமல் அடுத்த மன்னரை நியமிக்கும் சடங்கை தள்ளி போடச்சொல்லியுள்ளார். அதிகாரபூர்வமாக இவரது இறப்புக்கு அஞ்சலி ஓர் ஆண்டுக்கு கடைபிடிக்கப்படும்.
1932இல் அரசரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டது. இதை ஏற்க முடியாத அப்போதைய அரசர் பிரஜாதாய்போக் 1935இல் நாட்டை விட்டு வெளியேறினார். 1927இல் பிறந்த பூமிபால் 1946இல் மன்னராக பதவியேற்றார்.
இவர் மன்னராக இருந்த பொழுது தாய்லாந்து 32 பிரதமர்களை பார்த்துள்ளது.
மூலம்
தொகு- Thai King Bhumibol, world's longest-reigning monarch, dies: Royal Palace டைம்சு ஆப் இந்தியா, அக்டோபர் 13, 2016
- Thais mourn death of revered King Bhumibol Adulyadej பிபிசி அக்டோபர் 14, 2016