உருசியாவில் வீழ்ந்த எரிவிண்மீனின் 570 கிகி பகுதி மீட்பு

புதன், அக்டோபர் 16, 2013

இவ்வாண்டு ஆரம்பத்தில் உருசியாவின் செல்யாபின்ஸ்க் நகரில் வீழ்ந்த பாரிய விண்கல் ஒன்றின் துண்டு எனக் கருதப்படும் 570 கிகி எடையுள்ள பாறை ஒன்றை செபார்க்குல் ஏரியில் இருந்து சுழியோடிகள் மீட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


2013 பெப்ரவரி 18 இல் கண்டுபிடிக்கப்பட்ட செல்யாபின்ஸ்க் விண்கல்லின் ஒரு பகுதி

இந்தப் பாறை ஏரியில் வீழ்ந்த போது 6 மீட்டர் அகலமுள்ள துளை ஒன்றை உறைந்த பனியில் ஏற்படுத்தியிருந்தது. இது விண்கல்லின் ஒரு பகுதி என உறுதி செய்யப்படுமானால், இதுவரை புவியில் வீழ்ந்த விண்கற்களில் இதுவே மிகப் பெரியதாக இருக்கும்.


பெப்ரவரி 15 ஆம் நாள் 17 மீட்டர் அகல 10,000 தொன் எடையுள்ள விண்கல் வீழ்ந்த போது ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.


இப்போது கண்டுபிடிக்கப்பட்ட பாறை விண்கல்லின் ஒரு பகுதியெனக் கண்டறிவதற்குத் தமக்கு நீண்ட காலம் பிடிக்கும் என அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.


ஏற்கனவே 12 இற்கும் அதிகமான துண்டுகளை சுழியோடிகள் கடந்த பெப்ரவரி மாதம் முதல் மீட்டுள்ளனர். ஆனால், இவற்றில் நான்கு அல்லது ஐந்து கற்களே விண்கல்லின் பகுதிகள் என உறுதிப்படுத்தப்பட்டன.


தொடர்புள்ள செய்திகள் தொகு

மூலம் தொகு