உருசி இராணுவ வானூர்தி கருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 92 பேர் பலியாயினர்

புதன், திசம்பர் 25, 2024

சிரியாவுக்கு வந்துகொண்டிருந்த ரஷ்ய இராணுவ வானூர்தி கருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 92 பேர் பலியாயினர். இதில் ரஷ்ய செம்படையையின் இசைக்குழுவும் பயணித்தது.


மாசுக்கோவில் இருந்து புறப்பட்ட இந்த வானூர்தி தென் ரஷ்யாவின் சோச்சி நகரில் எரிபொருள் நிரப்புவதற்காக நின்றது.


சோச்சி நகரிலிருந்து புறப்பட்ட இரண்டு நிமிடங்களுக்குள் வானூர்தி ( டியு-154 டுபோலவ்) ரேடாரில் இருந்து மறைந்தது. சிரியாவின் லடாக்கியா நகருக்கு சென்ற இதில் பயணித்த பெரும்பாலானவர்கள், ரஷ்ய ராணுவத்தின் (செம்படை) புகழ் பெற்ற இசைக்குழுவான அலெக்சாண்ட்ரோவ் என்செம்பிள் குழுவின் உறுப்பினர்கள் ஆவர்.


இவ்விபத்து பற்றி விசாரிக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்திரவிட்டுள்ளார். இவ்விபத்துக்கு திங்கள் கிழமை தேசிய அளவில் துக்கம் கடைபிடிக்கப்படும் என்றார்.


1960இல் வடிவமைக்கப்பட்ட டியு-154 டுபோலவ் வானூர்தி 1972இல் பயன்பாட்டுக்கு வந்தது. சோவியத் ஒன்றியத்தின் ரஷ்யாவின் பெரும்பலமாக இது உள்ளது. இது வரை இவ்வகையான வானூர்திகள் 39 விபத்துக்குள்ளாகியுள்ளன. கடந்த 2010ஆம் ஆண்டு மேற்கு ரஷ்யாவில் விபத்துக்குள்ளானதில் போலந்து நாட்டின் அதிபர் உயிரிழந்தார்.

மூலம்

தொகு