உருசியாவின் ஸ்தாவ்ரபோல் நகரில் வாகனங்களில் சூட்டுக் காயங்களுடன் இறந்த உடல்கள்

வியாழன், சனவரி 9, 2014

உருசியாவின் சுதாவிரப்போல் நகரில் நான்கு வாகனங்களில் ஐந்து உடல்கள் சூட்டுக் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


பெப்ரவரி 7 ஆம் நாள் உருசியாவின் சொச்சி நகரில் 2014 ஆம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகவிருக்கும் நிலையில் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஸ்தாவ்ரபோல் நகரம் சோச்சியில் இருந்து 300 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.


37,000 காவல்துறையினரும், உட்துறை அமைச்சுப் பாதுகாப்பு அதிகாரிகளும் சோச்சி நகருக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


வடக்கு காக்கசுப் பகுதியில் இருந்து இசுலாமியத் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என பரவலாக அச்சம் தெரிவிக்கப்படுகிறது. செச்சினியாவின் போராளிக் குழுத் தலைவர் டோக்கு உமாரொவ் என்பவர் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நிகழ்வுகளைக் குறி வைக்குமாறு அண்மையில் தமது போராளிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.


கடந்த மாத இறுதியில் தெற்கு நகரான வோல்ககிராதில் இடம்பெற்ற இரண்டு தற்கொலைத் தாக்குதல்களில் 34 பேர் கொல்லப்பட்டனர்.


மூலம் தொகு