உதகை எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியில் 500 பேர் பங்கேற்ற தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம்

திங்கள், திசம்பர் 30, 2013

கலையரங்கின் வாயில்.

உதகமண்டலத்தில் உள்ள எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரி,தமிழகம்.வலை வலைதளத்துடன் இணைந்து நீலகிரி பகுதியைச் சார்ந்த பொதுமக்களுக்கும் பல்கலைக்கழக, கல்லூரி மாணவ,மாணவிகளுக்கும் தமிழ்க்கணினி, தமிழ் விக்கிப்பீடியா தொகுப்புப்பணிகளில் ஈடுபாட்டை ஏற்படுத்தவும் தமிழ் விக்கிப்பீடியாவின் திட்டங்களில் அனைவரும் பங்கேற்கும் வகையில் செய்முறை விளக்கம் அளிக்க வேண்டும் என்பதையும் நோக்கங்களாகக் கொண்டு எமரால்டு ஹைட் மகளிர் கல்லூரியில், 28.12.2013 அன்று 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை கல்லூரி கலையரங்கில் 500 பேர் பங்கேற்ற பயிலரங்கத்தை ஒருங்கிணைத்தது.


இப்பயிலரங்கினை பேராசிரியர். மா. தமிழ்ப்பரிதி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இப்பயிலரங்கில் எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறையைச் சார்ந்த இணைப் பேராசிரியர். பிரசில்லா வரவேற்புரை வழங்கினார்.


இப்பயிலரங்கில் பெரியார் பல்கலைக்கழக இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை பேராசிரியர். மா. தமிழ்ப்பரிதி சிறப்புரை ஆற்றினார்.தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள், தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருள்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறியின் பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருள்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் என்பதான பொருண்மைகள் குறித்த கணினிவழி நேரிடை செயல்முறைப் பயிற்சியை அவர் அளித்தார்


இப்பயிலரங்கில் எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியின் தலைமை நிருவாக அலுவலர் திருமதி சுபத்திரா இப்பயிலரங்கில், கல்லூரியின் தமிழ்க்கணினி கழகத்தை தொடங்கி வைத்து நன்றியுரை வழங்கினார். இந்தப் பயிலரங்கை மாணவி கலைவாணி தொகுத்துரைத்தார்.

காட்சிக்கூடம் தொகு