உக்ரைன் குண்டுவெடிப்புகளில் 27 பேர் காயமடைந்தனர்

வெள்ளி, ஏப்பிரல் 27, 2012

உக்ரைனின் கிழக்கே தினேப்பிர் நகரில் இன்று இடம்பெற்ற நான்கு வெவ்வேறு குண்டுவெடிப்புகளில் மொத்தம் 27 பேர் காயமடைந்தனர்.


முதல் இரண்டு குண்டுகளும் திராம் பேருந்து தப்பிடத்துக்கு அருகிலும், அருகில் உள்ள திரைப்பட மாளிகை அருகிலும் வெடித்துள்ளன. குண்டுகள் அனைத்தும் கழிவுக் குப்பைக் கூடைக்குள் போடப்பட்டிருந்தன.


இக்குண்டுவெடிப்புகள் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை. தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவி யூலியா தொமோசென்கோ தினேப்பிர்பெத்ரோவ்ஸ்க் நகரைச் சேர்ந்தவர்.


திமோசென்கோ கைது செய்யப்பட்ட விவகாரம் நாட்டில் தற்போது சூடு பிடித்துள்ள நிலையிலேயே இந்தக் குண்டுவெடிப்புகள் இன்று நிகழ்ந்துள்ளன. 2004 ஆம் ஆண்டில் நாட்டில் இடம்பெற்ற மேற்கத்தியவாதிகளுக்கு ஆதரவான புரட்சிக்கு திமோசென்கோ தலைமை வகித்தவர், ஆனாலும் 2010 தேர்தலில் உருசியாவுக்கு ஆதரவான யானுக்கோவிச் வெற்றி பெற்றார்.


இவ்வாண்டு கோடை காலத்தில் யூரோ 2012 காற்பந்துப் போட்டிகள் உக்ரைனில் நடைபெறவிருக்கின்றன.


தொடர்புள்ள செய்திகள் தொகு

மூலம் தொகு