இலங்கை தேர்தல் வன்முறையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட நால்வர் உயிரிழப்பு
சனி, அக்டோபர் 8, 2011
- 9 சூலை 2016: கிழக்கிலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008
- 4 சூன் 2016: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது
- 9 ஏப்பிரல் 2015: திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது
- 9 ஏப்பிரல் 2015: துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு
- 9 ஏப்பிரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்
இலங்கையில் 23 உள்ளூராட்சி சபைகளுக்காக வாக்களிப்பு நடைபெற்ற இன்று கொழும்பின் புறநகர்ப் பகுதியான கொலன்னாவ கொட்டிக்காவத்த பிரதேசத்தில் இருகுழுக்களுக்கிடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்சுமன் பிரேமச்சந்திர உட்பட நால்வர் உயிரிழந்துள்ளார். ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா படுகாயமடைந்துள்ளார்.
உயிரிழந்த பிரேமச்சந்திர இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்சவின் ஆலோசகராகப் பணியாற்றி வருகின்றார். அவரது மெய்ப்பாதுகாவலவரும் இச்சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார். காயமடைந்த துமிந்த சில்வா ஸ்ரீஜயவர்தனபுர மருத்துவமனையில் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் மேலும் பத்து பேர் காயமடைந்துள்ளதாக கஃபே அமைப்பு தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தின்போது காயமடைந்த பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உள்ளூராட்சி தேர்தல் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இதுவரை தேர்தல் வன்முறை சம்பவங்கள் 24 பதிவுசெய்யப்பட்டுள்ளதாக வாக்களிப்பு நிலையங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ பால மெதவத்த தெரிவித்துள்ளார்.
இதே பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அப்பிரதேச நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முல்லேரியா காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிவரை அமுலில் இருக்கும் என காவல்துறைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மூலம்
தொகு- [1], லங்காதீப, (சிங்களம்), அக்டோபர் 8, 2011
- துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் எம்.பி பாரத லக்ஷ்மன் உட்பட மூவர் பலி , வீரகேசரி, அக்டோபர் 8, 2011
- Bharatha Lakshman dead, Duminda critical,டெயிலி மிரர், அக்டோபர் 8, 2011
- துப்பாக்கிச் சூட்டில் துமிந்த சில்வா, முன்னாள் எம்.பி. பாரத லக்ஷ்மன் காயம் வீரகேசரி, அக்டோபர் 8, 2011