இலங்கை தெற்கு, மேல் மாகாண சபைத் தேர்தல்களில் ஆளும் கட்சி வெற்றி

ஞாயிறு, மார்ச்சு 30, 2014

இலங்கையின் மேற்கு மற்றும் தெற்கு மாகாணசபைகளுக்கு நேற்று நடைபெற்ற தேர்தல்களில் அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி வெற்றி பெற்று இரண்டு சபைகளையும் கைப்பற்றியது.


மேல் மாகாணசபையில் ஐமசுகூ 56 இடங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 28 இடங்களையும் சரத் பொன்சேக்காவின் சனநாயகக் கட்சி 9 இடங்களையும், மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) 6 இடங்களையும், மனோ கனேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி 2 இடங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசு 2 இடங்களையும் கைப்பற்றின.


தெற்கு மாகாண சபையில் ஐமசுகூ 33 இடங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 14 இடங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 5 இடங்களையும் சனநாயகக் கட்சி 3 இடங்களையும் கைப்பற்றின.


மூலம் தொகு