இலங்கை சனாதிபதி மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரச்சாரம்

திங்கள், சனவரி 11, 2010

இலங்கையின் சனாதிபதி தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார். முதலில் பலாலி விமானப்படைத்தளம் சென்ற அதிபர் அங்கே இராணுவ வீரர்களுக்கு உரையாற்றினார் பின்னர் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் சென்று பொதுமக்களுக்கு உரையாற்றினார்.

தனது உரையின் போது வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்களுக்கு முழு சதந்திரத்தோடு வாழும் உரிமை உள்ளது என்று கூறினார். அதைவிட வடக்கின் நீர்ப்பாசனம் விருத்திசெய்யப்படும் என்றும் அதற்கு மகாவலி கங்கையின் நீர் வடக்கு நோக்கி திருப்பப்படும் என்றும் உறுதி வழங்கினார்.

மூலம்